Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உங்கள் பான் கார்டு தொலைந்து விட்டதா! அப்படியென்றால் உடனே இதை செய்யுங்கள் இல்லையென்றால் அவ்வளவுதான்!

நாட்டிலுள்ள அனைத்து குடிமக்கள் மற்றும் அயல் நாட்டில் வாழும் இந்தியர்கள் என்று யாராகயிருந்தாலும், மத்திய அரசிடம் வரி கட்டினாலோ அல்லது வங்கிகளில் பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டாலோ நிச்சயமாக பான் கார்டு வைத்திருக்க வேண்டும். இந்த நிரந்தர கணக்கு எண் என்றழைக்கப்படும் பான் கார்டை வருமானவரித்துறை வழங்கி வருகிறது. பிளாஸ்டிக் தகடு வடிவத்தில் வழங்கப்படும் இந்த அட்டையை பயன்படுத்தி வருமான வரி கட்டுவது, வீடு, நிலம், உள்ளிட்டவற்றை வாங்க, விற்க, மிகப்பெரிய பணப்பரிவர்த்தனையை கண்காணிப்பது, வரிஏய்ப்பு உள்ளிட்டவற்றை கண்காணிக்கலாம்.

கடந்த சில வருடங்களாகவே பான் கார்டு வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதிதாக வங்கி கணக்கு ஆரம்பிப்பதற்கும் இது அவசியம் என்ற உத்தரவை தொடர்ந்து, மக்கள் இணையதளம் மற்றும் கணினி சென்டர்கள் போன்றவற்றின் உதவியுடன் பான் கார்டு விண்ணப்பம் செய்து வருகிறார்கள். 2 புகைப்படங்கள், உங்களுடைய முகவரி சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பணம் செய்து ஒரு வார காலத்திற்குள் இந்த பான் கார்டை பெற்றுக்கொள்ள முடியும்.

இவ்வாறு பான் கார்டை இணையதளம் மூலமாக பெறும் நாம் சில சமயங்களில் தொலைத்து விடுவோம். அதன் பிறகு அவசியம் கருதி மறுபடியும் விண்ணப்பிக்கும் போது 2 பான் கார்டுகள் இருக்கிறது என்பதை போல காண்பிக்கும்.

இன்னும் ஒரு சிலர் டிமேட் மற்றும் வருமான வரி கணக்கு தனித்தனி பான் கார்டு வைத்திருப்பார்கள்0 இப்படி வெவ்வேறு பணிகளுக்கு, வெவ்வேறு பான் கார்டு வைத்திருப்பதும், ஒன்றுக்கும் மேற்பட்ட பான் கார்டு வைத்திருப்பது வருமான வரி சட்டம் 1961ன் கீழ் பிரிவு 272Bன் விதிகளின் அடிப்படையில் சட்டப்படி குற்றமாகும். இந்தச் சட்டத்தின் படி 10000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும், வருமானத்துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

இந்நிலையில, இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் முதலில் நீங்கள் என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.

இரண்டு பான் கார்டு வைத்திருந்தால் ஒரு பான் கார்டை சமர்ப்பிப்பதற்கு என ஒரு படிவம் வழங்கப்படும். இந்த படிவத்தில் தாங்கள் எந்த எண்ணெய் தொடர்ந்து வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களோ அந்த பான் கார்டு எண்ணை குறிப்பிட்டு மீதமுள்ள தகவலை பார்ம் எண் 11 படிவத்தில் நிரப்ப வேண்டும் என சொல்லப்படுகிறது. இந்த படிவத்துடன் ரத்து செய்யப்பட வேண்டிய பான்கார்டை நகலெடுத்து இணைப்பது மிகவும் அவசியம். 2 பான் கார்டு வைத்திருப்பவர்கள் உடனடியாக இந்த முறையை பின்பற்றி வருமானவரித்துறைக்கு அபராத தொகையை கட்டாமல் தப்பித்துக் கொள்ளலாம்.

பொதுவாக தாங்கள் வசிக்கும் மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு மாற்றல் பெற்றால் பான் கார்டை மாற்ற வேண்டும் என்ற அவசியம் கிடையாது. அதேநேரம் உங்களுடைய பான் கார்டில் ஏதாவது மாற்றம் செய்ய வேண்டுமென்றால் 2 புகைப்படம், பிறந்த தேதி மற்றும் முகவரி உள்ளிட்டவற்றைக் கொண்ட ஐடி பழைய கார்டு நகல் உள்ளிட்டவற்றின் உதவியோடு பான் கார்டில் திருத்தம் செய்யலாம் என்று சொல்லப்படுகிறது.

Exit mobile version