Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

டாஸ்மாக் கடையில் வம்பிழுத்த திமுகவின் உடன்பிறப்பு! நடவடிக்கை எடுக்குமா தமிழக அரசு!

திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து திமுகவின் உடன்பிறப்புகளின் அத்துமீறல் எல்லை மீறிக் கொண்டே செல்கிறது.

அந்த விதத்தில் தென்காசி மாவட்டம் செங்கோட்டை ஒன்றிய திமுக செயலாளர் ரவி சங்கர் செங்கோட்டை நகர் பகுதியில் இருக்கின்ற மதுபான கடைக்கு சென்று ஜெயலலிதாவின் புகைப்படத்தை அகற்றிவிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படத்தை வைக்க வேண்டும் என்று தெரிவித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனையடுத்து தனக்கு மதுபான கடைகளில் இருந்து மாதம்தோறும் கமிஷன் கொடுக்க வேண்டும் எனவும் வற்புறுத்தியதாக சொல்லப்படுகிறது.

அத்துடன் கேரள மாநிலத்தில் உள்ளாட்சித் தேர்தல் சமயத்தில் தமிழக மற்றும் கேரள எல்லைப்பகுதியில் பாஜகவின் பிரச்சார வாகனத்தை தடுத்து சண்டையில் ஈடுபட்டதாக புகார் தெரிவிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து குற்றாலம் காவல் நிலையத்தில் ஒருவரை கடத்தி மிரட்டியதாக வழக்கு நிலுவையில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில், திமுக நிர்வாகி டாஸ்மாக் கடையில் முதலமைச்சர் புகைப்படத்தை மாட்டச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டது பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது

Exit mobile version