Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வருங்கால முதல்வர் புஸ்ஸி ஆனந்த்!. சென்னையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்!…

bussy anand

Vijay tvk: புஸ்ஸி என்பது புதுச்சேரியில் ஒரு எம்.எல்.ஏ தொகுதி. அந்த தொகுதியில் போட்டியிட்டு ஆனந்த் வெற்றி பெற்றதால் புஸ்ஸி ஆனந்த் ஆகிவிட்டார். இந்த பெயரை வைத்து அவரை பலரும் கிண்டலடித்தனர். எனவே, இப்போதெல்லாம் என். ஆனந்த் என்று மட்டுமே போஸ்டர்களில் குறிப்பிடுகிறார்கள். எம்.எல்.ஏ பதவி போனவுடன் புதுச்சேரியில் விஜய் ரசிகர் மன்றத்துக்கு தலைவராக இருந்தார். இப்படித்தான் இவருக்கு விஜயுடன் பழக்கம் ஏற்பட்டது.

எனவே, அவரை தன்னுடன் வைத்துக்கொண்டார் விஜய். விஜய் அரசியல் கட்சி துவங்குவதற்கு முன்புலிருந்து விஜயோடு பயணித்து வருகிறார். விஜய் அரசியல் கட்சி துவங்கியபின் அவரின் வலது கை போல மாறினார். விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சி எப்போது எங்கு நடந்தாலும் அதற்கான ஏற்பாடுகளை புஸ்ஸி ஆனந்தே செய்வார். விக்கிரவாண்டியில் நடந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகளையும் அவரே செய்தார். தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயளாளராகவும் அவரை நியமித்திருக்கிறார் விஜய். தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை வழிநடத்துவதும் இவரே.

poster

அதேநேரம், செய்தியாளர் எதாவது கேள்வி கேட்டால் ‘எல்லாம் தலைவர் சொல்லுவார்’ என சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகிவிடுவார். அதேநேரம், ஆதவ் அர்ஜுனா வந்துவிட்டதால் புஸ்ஸி ஆனந்த் டம்மி ஆகிவிடுவார் என்றெல்லாம் சமூகவலைத்தளங்களில் கிண்டல் அடித்தார்கள். ஒருபக்கம் தவெக கட்சியின் முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் நடக்கிறது.

இந்நிலையில், ‘தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் வருங்கால முதலமைச்சர் அவர்கள் வருக.. வருக’ என ஆனந்த் போட்டோவை போட்டு கூட்டம் நடக்கும் இடத்தின் அருகேயும், சென்னையின் சில இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கிறது. இது தவெக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை புறநகர் மாவட்ட செயலாளர் ஈ.சி.ஆர் சரவணன் என்கிற பெயரில் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது.

ஆனால், எனக்கும் அந்த போஸ்டருக்கும் சம்பந்தம் இல்லை. வேறு கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி செய்திருக்கலாம். வேண்டுமென்றே என் முதுகில் குத்தும் வகையில் இப்படி போஸ்டர்களை ஓட்டியிருக்கிறார்கள் என சரவணன் விளக்கமளித்திருக்கிறார்.

Exit mobile version