சென்னையில் கடந்த ஒரு வருடத்திற்கு பின்னர் உச்சத்தை தொட்டு இருக்கிற விமான சேவை!

0
145

நாடு முழுவதும் நோய் தொற்று இரண்டாவது அலை குறைந்து வருகிறது இதனைத் தொடர்ந்து மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சகம் நாடு முழுவதும் இருக்கக் கூடிய உள்நாட்டு விமான நிலையங்களில் 100 சதவீத பயணிகள் உடன் விமானங்களை இயக்க அனுமதி வழங்கியிருக்கிறது.

இதன் காரணமாக, சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் சென்ற 19 மாதங்களுக்குப் பின்னர் பயணிகளின் எண்ணிக்கை 27 ஆயிரமாக அதிகரித்து இருக்கிறது 224 விமான சேவை இயக்கப்பட்டு இருக்கிறது .

இதன் காரணமாக சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்திலும் விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு இருக்கிறது சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் கடந்த 19 மாதங்களுக்கு பின்னர் தற்சமயம் 113 புறப்பாடு விமானங்களும், 111 வருமானங்களும், என்று ஒட்டுமொத்தமாக 224 விமானங்கள் இயக்கப்பட்டன. அதில் டெல்லிக்கு 15 புறப்பாடு விமானங்களும், மும்பைக்கு 15புறப்பாடு வருகை என 30 விமானங்களும் பெங்களூருக்கு 22 புறப்பாடு வருகை விமானங்களும், அதிகரிக்கப்படுகின்றன.

அதேபோல பயணிகளின் எண்ணிக்கையும் பெருமளவு அதிகரித்து இருக்கிறது இதுவரை இல்லாத அளவிற்கு சென்னைக்கு வருகை தரும் உள்நாட்டு விமானங்களிலும் சென்னையில் இருந்து மற்ற நகரங்களுக்கு புறப்பட்டு செல்லும் விமானங்களிலும், என்று 27 ஆயிரம் பேர் பயணம் செய்து வருகிறார்கள்.

நோய்தொற்று குறைந்த பின்னர் கடந்த 19 மாதங்களில் இதுவே அதிக எண்ணிக்கையிலான பயணிகள் பயணம் செய்து இருக்கிறார்கள் என்பது குறிப்பிட தக்கது. அதிலும் குறிப்பாக புதுடெல்லி, கவுகாத்தி, கொல்கத்தா, மும்பை, பெங்களூரு, கோயம்புத்தூர், உள்ளிட்ட விமானங்களில் பயணம் செய்யும் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

இந்த சூழ்நிலையில், தொடர்ந்து விடுமுறை நாட்களும் பண்டிகை தினங்களும் வரவிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் சென்னை விமான நிலையத்தில் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை அடுத்த சில தினங்களில் மேலும் அதிகரித்து 200 வருகை 200 புறப்பாடு 400 விமான சேவைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.