இந்த ஒன்பது மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனை வீடியோக்களை சமர்ப்பிக்க வேண்டும்! உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!
சேலம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதி கணியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளியில் பிளஸ் டூ மாணவி வருமான முறையில் உயிரெழுந்த சம்பவம் கடந்த 17ஆம் தேதி வன்முறையாக வெடித்தது. தொடர்ந்து மாணவியின் மாணவியின் மறுபிரேதபரிசோதனை செய்ய வேண்டும் எனவும் மன்றத்தில் மனு அளித்திருந்தார் அந்த மனுவை விசாரித்த நீதிபதி மாணவியின் உடலை மறு கூறாய்வு செய்ய உத்தரவிட்டார்.
மேலும் மறுபிரேத பரிசோதனை செய்யும் பொழுது வீடியோ எடுக்கப்பட்டது. மேலும் பெரும்பாலான உடல் கூறாய்வுகள் மருத்துவர்கள் இல்லாமலேயே துப்புரவு பணியாளர் மற்றும் மருத்துவமனை உதவியாளர்கள் மூலம் செய்யப்படுகிறது எனவும் புகார் எழுந்து வருகின்றது. இதனால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவு கோரியும் தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று மதுரை உயர்நீதிமன்ற கிளையில் விசாரணைக்கு வந்தது.
அந்த விசாரணையில் திருச்சி , தஞ்சை, கன்னியாகுமாரி ,கரூர் உள்ளிட்ட 9 மருத்துவக் கல்லூரிகளில் ஜூலை 18,19,20 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாகவுகளின் வீடியோ பதிவுகளை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவினால் பரிசோதனையின் போது ஏற்படும் தவறுகளை எளிதில் கண்டறிய முடியும் எனவும் உயர்நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.