Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வங்கிகளை விட அதிக வருமானம் வழங்கும் அஞ்சலக சிறு சேமிப்பு திட்டங்கள்!

சேமிப்பு என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாகிவிட்டது. நோன்பை விட நோய் தொற்று காலகட்டத்திற்கு பின்னர் எதிர்கால தேவைகளை கருத்தில் கொண்டு ஏதாவது சேமிப்பு திட்டங்களில் பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்ற எண்ணம் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

ஆகவே வங்குகள் அல்லது தபால் நிலையங்களில் அதிக வட்டியுடன் என்னென்ன சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது என்று தேடத் தொடங்குவோம். இது போன்று நீங்களும் சேமிப்பு திட்டங்களை தெரிந்து கொண்டு அதில் இணைந்து பயன்பெற வேண்டும் என்றால் இதோ அதிக வட்டியுடன் பொறுப்பையும் குறைக்கும் அஞ்சலக சேமிப்பு திட்டங்கள் தொடர்பாக இங்கே முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பாக பெரும்பாலான முன்னணி வங்கிகளில் ஒரு வருடம் முதல் 10 வருடங்கள் வரையிலான நிரந்தர வைப்புத் தொகை காண வட்டி விகிதம் 5% முதல் 6% வரையில் இருக்கிறது.

மூத்த குடிமக்களுக்கு எல்லா வங்கிகளும் முதலீடு செய்த தொகையில் 0.5 சதவீதம் கூடுதல் விகிதத்தை வழங்குகின்றன. ஆனால் அஞ்சலகத்தில் இருக்கும் திட்டத்தை பொறுத்தவரையில் வட்டி விகிதம் 5.5% முதல் 7.6% வரையில் வழங்கப்படுகிறது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோரின் எதிர்கால பணத்தை நிறைவேற்றும் சேமிப்பு திட்டங்களில் ஒன்றுதான் புது வருங்கால வைப்பு நிதி 15 வருடங்கள் வரையில் முதலீடு செய்யும் இந்த திட்டத்தில் ஒவ்வொரு நிதி ஆண்டிலும் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் பி பி எஃப் இல் டெபாசிட் செய்யலாம்.

இந்தத் திட்டத்தில் இணையும் பயனர்கள் 5 வருடங்களுக்கு பின்னர் இந்த திட்டத்தில் இருந்து வெளியேறலாம் அல்லது நான்காம் ஆண்டில் இருந்து கடனை திரும்ப பெற முடியும் என்ற வசதி இருக்கிறது.

அதோடு வருமான வரிச் சட்டம் பிரிவு 80 சியின் கீழ் வரிச்சலுகையையும் பெற முடியும் வட்டி விகிதம் ஒரு வருடத்திற்கு 7.1% என இருக்கிறது.

தேசிய சேமிப்பு பத்திரம்

நீங்கள் நிலையான வருமானம் மற்றும் வரிச்சலுகையுடன் ஐந்து வருடங்களுக்கு முதலீடு செய்ய விரும்பினால் தேசிய சேமிப்பு பத்திரம் உங்களுக்கு நிச்சயமாக பலன் அளிக்கும். தற்போது இதன் வட்டி விகிதம் 6.8 சதவீதமாக இருக்கிறது. அதேசமயம் வரிச்சலுகையுடன் 5.5% ஆக வட்டி வழங்கப்படுகிறது.

நீங்கள் தேசிய சேமிப்பு பத்திர திட்டத்தில் இணைந்து பயன்பெறும் போது ஒரு முறை நீங்கள் மொத்தமாக பணம் செலுத்தினால் போதும். ஒவ்வொரு முறையும் நீங்கள் பணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. ஆகவே மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

சுகன்யா சம்ரிதி யோஜனா என்பது பெண் குழந்தைகளுக்கான தபால் அலுவலக சிறுசேமிப்பு திட்டம் இந்த திட்டத்தில் வருடத்திற்கு 7 புள்ளி 6 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. 21 வருடத்திற்கு முதலீடு செய்யும் செல்வமகள் திட்டத்தில் 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் பெயரில் மட்டுமே அஞ்சலக கணக்கு திறக்கப்படும்.

இந்தத் திட்டத்தில் இணையும் பயனாளிகள் மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே ஐந்து வருடங்களுக்குப் பிறகு முன்கூட்டியே கணக்கை மூட அனுமதி வழங்கப்படுகிறது. அதோடு சிறுமிக்கு 18 வயது நிறைவடையும்போது சிறுமியின் உயர்கல்விக்காக முந்தைய வருட கணக்கில் இருப்பில் அதிகபட்சமாக 50 சதவீதத்தை திரும்ப பெறுவதற்கு அனுமதி வழங்குகிறது.

அஞ்சல் அலுவலக நேர வாய்ப்பு கணக்கு

அஞ்சால் அலுவலக நேர வைப்பு கணக்கு என்பது 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரையிலான கால அவகாசத்துடன் வருகிறது. தொடக்கவரம்பு தொகையாக 1000 ரூபாய் முதல் செலுத்தி அஞ்சலக நேர வைப்பு கணக்கை திறக்க முடியும். தற்சமயம் ஐந்து வருட கால அஞ்சலக நேர வைப்பு தொகை காண வட்டி விகிதம் வருடத்திற்கு 6.7% வரையில் வழங்கப்படுகிறது.

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

வயதானவர்களின் நலனுக்காக கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய அரசால் ஆரம்பிக்கப்பட்ட பாதுகாப்பான திட்டம் தான் மூத்தக்குடி மக்கள் சேமிப்பு திட்டம். எந்த விதத்திலும் மூத்த குடிமக்களுக்கு ஆபத்து இல்லாத முதலீட்டை வழங்குவதுடன் 7. 4 சதவீதம் வரையில் வட்டியை பெற உதவியாக இருக்கிறது.

குறிப்பாக சிறுசேமிப்பு முதல் அஞ்சல் அலுவலக முதலீடுகள் உள்ளிட்டவற்றின் வட்டி விகிதம் நிதியாண்டில் ஒவ்வொரு காலாண்டின் தொடக்கத்திலும் அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version