Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமரின் தமிழக பயணம் குறித்து ட்விட்டரில் பதிவு: பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவருக்கு சம்மன்!

பிரதமரின் தமிழக பயணம் குறித்து ட்விட்டரில் பதிவு: பாஜக தொழில்நுட்ப பிரிவு தலைவருக்கு சம்மன்!

பாஜக மாநில தொழில்நுட்ப தலைவர் நிர்மல் குமாருக்கு மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தமிழக அரசு பாதுகாப்பு குறித்து விளக்கம் அளிக்காததால் தான் பிரதமர் மோடியின் தமிழக பயணம் தள்ளிப்போனதாக பாஜக மாநில தொழில் நுட்ப தலைவர் நிர்மல் குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இப்பதிவு குறித்து முகேந்தர் அமர்நாத் என்பவர் மத்திய குற்றப்பிரிவு சைபர் க்ரைம் போலீசாரிடம் புகார் அளித்திருந்தார். இதை அடுத்து சைபர் கிரைம் போலீசார் நிர்மல் குமார் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் அலுவலகத்தில் நிர்மல் குமார் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பிருக்கின்றனர்.

Exit mobile version