நாளை நடைபெறவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைப்பு! தமிழக அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!
மிக்ஜம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களில் நாளை(டிசம்பர்7) தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மிக்ஸ் புயல் காரணமாக கனமழை பெய்தது. இதனால் சென்னையில் பல இடங்களில் வீடுகளில், சாலைகளில் வெள்ளம் சூழ்ந்தது. தமிழக அரசும் சென்னையில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
சென்னையில் இன்னும் இயல்புநிலை திரும்பவில்லை. மேலும் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கும் சென்னைக்கும் புயல் காரணமாக கடந்த சில நாட்களாக பள்ளிகள் அனைத்துக்கும் விடுமுறைகள் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் அனைத்துக்கும் நாளை முதல் அதாவது டிசம்பர் 7ம் தேதி முதல் அரையாண்டு பொதுத் தேர்வு நடைபெறும் என்று தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவித்திருந்தது. இதையடுத்து சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு ஒத்தி வைக்கப்படுவதாக தமிழக அரசு தற்பொழுது அறிவித்துள்ளது.
மிக்ஜம் புயல் பாதித்த நான்கு மாவட்டங்களான சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களை தவிர மீதம் உள்ள மாவட்டங்களில் திட்டமிட்டபடி அரையாண்டு தேர்வு நாளை(டிசம்பர்7) தொடங்கவும் என்றும் புயல் பாதித்த மாவட்டங்களில் நிலைமை சீரானதும் அரையாண்டு தேர்வுகள் நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.