பெரியவர்களுக்கு ஏற்படும் ஒரு பொதுவான பாதிப்பு மூட்டு வலி.இதை மருந்து மாத்திரை இன்றி குணப்படுத்தும் வழி இங்கு தரப்பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:
முடவாட்டுக்கால் கிழங்கு
தக்காளி
சீரகம்
மிளகு
கொத்தமல்லி தழை
உப்பு
மஞ்சள் தூள் பூண்டு
கறிவேப்பிலை
எண்ணெய்
சின்ன வெங்காயம்
பூண்டு
செய்முறை விளக்கம்:
ஒரு முடவாட்டுக்கால் கிழங்கை தோல் நீக்கிவிட்டு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள்.அதற்கு முன் மூடவாட்டுக்காலை நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு இரண்டு பல் வெள்ளைப்பூண்டு,அரை தேக்கரண்டி கருப்பு மிளகு,கால் தேக்கரண்டி சீரகத்தை உரலில் போட்டு இடித்துக் கொள்ள வேண்டும்.
பிறகு அடுப்பில் குக்கர் வைத்து நறுக்கிய முடவாட்டுக்கால் கிழங்கை சேர்த்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் விட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து இரண்டு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு இடித்த சீரக விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.அடுத்து ஒரு கொத்து கருவேப்பிலை சேர்க்க வேண்டும்.
அதன் பிறகு ஐந்து சின்ன வெங்காயத்தை தோல் நீக்கிவிட்டு பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.
அடுத்து ஒரு தக்காளி பழத்தை பொடியாக நறுக்கி அதில் சேர்த்து வதக்கவும்.பின்னர் வேகவைத்த முடவாட்டுக்கால் கிழங்கை சேர்த்து வதக்கவும்.அதற்கு அடுத்து சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கிண்டிவிட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றவும்.
பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து முடவாட்டுக்கால் சூப்பை கொதிக்க வைத்து இறக்கி கொள்ளவும்.இறுதியாக சிறிதளவு கொத்தமல்லி தழையை நறுக்கி சூப்பில் சேர்க்கவும்.இந்த முடவாட்டுக்கால் சூப்பை அடிக்கடி குடித்து வந்தால் மூட்டு எலும்புகள் வலிமையாக இருக்கும்.மூட்டு வலி,மூட்டு தேய்மானம் போன்ற எந்த பாதிப்பும் ஏற்படாது.