பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

0
291
power-connection-for-public-use-the-work-of-surveying-all-over-tamil-nadu-is-intense

பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்பு! தமிழகம் முழுவதும் கணக்கெடுக்கும் பணி தீவிரம்!

கடந்த ஆண்டு முதல் மின் இணைப்பிற்கான கட்டணம் அதிகரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மின் இணைப்பு தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை மின் வாரியத்துறை எடுத்து வந்தது. அதில் அனைத்து மின் இணைப்பு நுகர்வோரும் அவரவர்களின் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன்  இணைக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது. அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் பெரும்பாலானோர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்காத காரணத்தினால் கடந்த பிப்ரவரி மாதம் முழுவதும் கால அவகாசம் வழங்கி மின்வாரியத்துறை உத்தரவிட்டது.

இந்நிலையில் பொது பயன்பாடுகாண மின் இணைப்புகள் எத்தனை என்பது குறித்து வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி தீவிர படுத்தப்பட்டுள்ளது. மின்வாரிய ஊழியர்கள் அப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்கும் பணிக்கான கால அவகாசம் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது. சுமார் ஒரு லட்சம் மின் பயன்பாட்டாளர்கள் தங்களது மின் இணைப்பு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ளனர் என தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.

ஆதார் எண்ணை இணைக்காத மின் நுகர்வோருக்கு இதற்கு மேல் கால அவகாசம் அளிக்கப்படாது என்று மின்சாரத்துறை அமைச்சர் வி செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மேலும் பொது பயன்பாட்டிற்கான மின் இணைப்புகள் எத்தனை உள்ளது என்பது குறித்து சென்னை உள்பட பல்வேறு ஊர்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகின்றது. வீடு வீடாக நடத்தப்படும் இந்த கணக்கெடுப்பில் பொது பயன்பாட்டுக்கான மின் இணைப்புகளை எண்ணிக்கை விவரங்கள் அனைத்தும் சேகரிக்கப்படும். இந்த விவரங்களைக் கொண்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மின் இணைப்புகளின் எண்ணிக்கை ஒப்பிட்டு பார்க்கப்பட உள்ளது என மின்வாரிய வட்டாரங்கள் கூறுகின்றது.