Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

#image_title

எப்பேர்ப்பட்ட காய்ச்சலையும் குணமாக்கும் பவர் புல் மிளகு கசாயம்..!!

தற்பொழுது குளிர்காலம் தொடங்கி விட்டதால் சளி, காய்ச்சல், வறட்டு இருமல் பாதிப்பு எளிதில் உடலை அண்டி விடும். இதை மருந்து மாத்திரை வைத்து சரி செய்வதை விட வீட்டில் உள்ள மிளகு, இஞ்சியை வைத்து கசாயம் செய்து பருகினால் சில நிமிடத்தில் சரியாகி விடும்.

தேவவயான பொருட்கள்:-

*மிளகு

*இஞ்சி

*தண்ணீர்

செய்முறை…

அடுப்பில் ஒரு வாணலி வைத்து அதில் 25 மிளகு சேர்த்து நன்றாக வறுத்து ஆற விடவும். பின்னர் இதை மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்து பொடித்துக் கொள்ளவும்.

அடுத்து 1 துண்டு இஞ்சியை தோல் நீக்கி சுத்தம் செய்து கொள்ளவும். இதை உரலில் போட்டு இடித்துக் கொள்ளவும்.

பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 1 1/4 டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொள்ளவும். பின்னர் அதில் வறுத்து பொடியாக்கி வைத்துள்ள மிளகு மற்றும் இடித்து வைத்துள்ள இஞ்சியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.

பின்னர் இதை ஒரு டம்ளருக்கு வடிகட்டி வெதுவெதுப்பான சூட்டில் பருகவும். இவ்வாறு செய்தால் காய்ச்சல் பாதிப்பு சில மணி நேரத்தில் குணமாகும்.

Exit mobile version