மீண்டும் தமிழகத்தில் மின் தடை!! அதிர்ச்சியில் மக்கள்!! 

0
98
Power outage again in Tamil Nadu!! People in shock!!

மீண்டும் தமிழகத்தில் மின் தடை!! அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது அடிக்கடி மின்தடை ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். ஆனால் தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தனது ஆட்சியில் மின்தடை ஏற்படாது என்று தேர்தல் வாக்குறுதி   அளித்திருந்தார். ஆனால் தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது.

இந்த நிலையில் தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் பல்வேறு பணிகளின் காரணமாக இன்று மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது.

மேலும் 4 மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும்  அறிவித்துள்ளது. திருச்சி, மதுரை , கன்னியாகுமரி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் இன்று மின்தடை என்று தெரிவித்துள்ளது.

திருச்சி மாவட்டத்தில் ஆவாரவள்ளி, சிறுகனூர்,துருபட்டூர், சி.ஆர்.பாளையம், மனியங்குறிச்சின, எம்.ஆர்.பாளையம், சனமங்கலம், கண்ணாடிக்குடி , நம்பு குறிச்சி, வாழையூர், நெடுங்கூர் மற்றும் திருச்சி சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9.45 மணி முதல் மாலை 5மணி வரை மின்தடை.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெதஸ்தாநகர், அரசன்குழி, மத்தியாஸ்நகர் , குருசெடி, துவரங்காடு போன்ற பகுதிகளில் காலை 10 முதல் மதியம் 3மணி வரை மின்தடை.

மதுரை மாவட்டத்தில் புதப்பட்டி, ரவுத்தம்பட்டி, மீனாட்சிபுரம், அஸ்டின்பட்டி, உன்னிப்பட்டி, மொட்டமலை, தோப்பூர், ஆகிய பகுதிகளில் மின் தடை மற்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் பல இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை என்று தமிழ்நாடு இன் வாரியம் அறிவித்துள்ளது.