Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் நிலக்கரி தட்டுப்பாடா? தமிழகம் இருளில் மூழ்கும் அபாயம்!

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் தமிழகத்தில் நடைபெற்ற திமுக ஆட்சியின்போது வரலாறு காணாத மின்வெட்டு மாநிலம் முழுவதும் நிலவியது.

இதனால் அப்போது பொதுமக்கள் பல சிரமங்களை மேற்கொண்டார்கள், இந்த நிலை மீண்டும் வரவே கூடாது என்று நினைத்த தமிழக மக்கள் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுகவை படுதோல்வியடைய செய்தார்கள்.

எந்த அளவிற்கு படுதோல்வி என்றால் எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கூட திமுக பெறாத நிலையை அடைந்தது அந்த தேர்தலில் திமுக.

அந்த 2011ஆம் ஆண்டு தேர்தல் முதல் அடுத்த 10 வருட காலத்திற்கு திமுக ஆட்சி அமைப்பதை பற்றி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.

இந்த நிலையில், சென்ற வருடம் நடைபெற்ற தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது.

ஆகவே மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது தமிழகத்தின் முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்று ஆட்சியை வழி நடத்தி வருகிறார்.

இந்நிலையில், கடந்த 2006 ஆம் ஆண்டு வந்த மின்வெட்டு நிலை மீண்டும்வந்து விடுமோ என்ற அச்சத்தை தற்சமயம் பொதுமக்களின் மனதில் கிடைத்திருக்கிறார்கள் ஆளும் கட்சியை சார்ந்தவர்கள்.

இந்தநிலையில், தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் தலா 210 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி திறன் கொண்ட 5 மின் உற்பத்தி இயந்திரங்கள் இயங்கிவருகின்றன.

இதன் மூலமாக நாளொன்றுக்கு 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இங்கே உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பல்வேறு பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில தினங்களாக முக்கிய மூலப் பொருளான நிலக்கரி தட்டுப்பாடு நிலவி வருகிறது. நிலக்கரி போதுமான அளவு கிடைக்காததால் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு வருகிறது. ஆகவே அனல் மின் நிலையத்தில் இயங்கி வரும் ஐந்து அலகுகளும் இயங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

அவ்வப்போது வரும் நிலக்கரி மூலமாக சில நினைவுகள் மட்டும் இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக, தூத்துக்குடி மட்டுமல்லாமல் பல்வேறு பகுதிகளில் மின் தட்டுப்பாடு உண்டாகும் சூழ்நிலை நிலவி வருகிறது.

சில நாட்களுக்கு முன்னர் நிலக்கரி தேவை பூர்த்தி செய்யப்பட்டு 5 அலகுகளும் இயங்கி வந்த நிலையில், தற்போது மறுபடியும் நிலக்கரி தட்டுப்பாடு நிலவி இருக்கிறது.

இதன் காரணமாக, 5 அலகுகளில் ஒரு அலகில் மட்டுமே மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. 4 அலகுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

Exit mobile version