Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

#image_title

பிரமுகர் வருகையின் போது மின் தடை !! கண்டித்து பாஜகவினர்  சாலை மறியல்!!

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்ற 10 ம் தேதி பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற  சென்னை வந்திருந்தார்.

இவர் விமானத்தின்  மூலம் கடந்த 10 ம் தேதி இரவு சென்னை விமான நிலையத்திற்கு  வந்தார்.

அமித்ஷா சென்னை வந்த அன்று சென்னை விமான நிலையத்திற்கு வெளியே  உள்ள  ஜிஎஸ்டி சாலையில் மின் துண்டிப்பு ஏற்பட்டதன் காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் வேளையில் மின்தடை ஏற்பட்ட  சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியது.

முக்கிய பிரமுகர் வரும் போது இது போன்ற சம்பவம் ஏற்பட்டதை கண்டித்து பாஜகவினர் போராட்டத்தில் இறங்கி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இது போரூர் துணை மின்நிலையத்தில் உள்ள உயர் மின் அழுத்த பாதையில் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக உண்டாகியது என்று தெரிவித்தனர். பாதையின் விரிசல் காரணமாக மின் துண்டிப்பு ஏற்பட்டு  மின்தடை ஏற்பட்டிருக்கிறது.

இந்த மின்தடையனது இரவு 9.34 மணியில் இருந்து 10.12 மணி வரை மட்டுமே  ஏற்பட்டுள்ளது.பின்பு இதனை சரி செய்ய மின்வாரியத்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் காரணமாக மாற்று வழியில் மின் விநியோகம் செய்யப்பட்டது.

இதனையடுத்து இது போன்ற சம்பவம் மீண்டும் நடைபெறாமல் இருக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.இது மட்டுமின்றி முக்கிய பிரமுகர்கள் வருகையின் போதும் அதோடு அரசு நிகழ்ச்சிகள் எதாவது நடைபெறும் போதும் தடையில்லா மின்சாரம் வழங்கபட  வேண்டும் என்று அனைத்து மண்டல தலைமை பொறியாளர்களுக்கும் ,  மின்வாரியத்துறை அதிகாரிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பட்டது .

Exit mobile version