Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

மீண்டும் ரீமேக் ஆகும் ‘பிங்க்’: அஜித் கேரக்டரில் பிரபல நடிகர்

மீண்டும் ரீமேக் ஆகும் ‘பிங்க்’: அஜித் கேரக்டரில் பிரபல நடிகர்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் நடித்த ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் படமான ‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படத்தில் தல அஜித் நடித்து இருந்தார் என்பதும் அந்தப் படம் தமிழில் சூப்பர் ஹிட் ஆனது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தை தற்போது தெலுங்கில் ரீமேக் செய்ய தயாரிப்பாளர் போனி கபூர் முடிவு செய்துள்ளார். இது குறித்த பேச்சுவார்த்தைகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அமிதாப்பச்சன், அஜித் நடித்த வழக்கறிஞர் கேரக்டரில் பவர்ஸ்டார் பவன் கல்யாண் நடிக்க உள்ளார். இந்த படத்தை ஸ்ரீராம் வேணு என்றஇயக்குனர் இயக்க உள்ளார்.

பிங்க் ரீமேக் படத்தை தெலுங்கில் தயாரிக்க வேண்டும் என்ற திட்டம் ஏற்கனவே போனிகபூரிடம் இருந்ததால் தான் ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தை அவர் தெலுங்கில் டப் செய்து வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தெலுங்கு திரையுலகில் பவர்ஸ்டார் பவன்கல்யாண், அஜித்துக்கு நிகரான ஸ்டார் என்பதால் இந்த படம் தெலுங்கிலும் ஹிட்டாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ‘நேர் கொண்ட பார்வை’ படத்தால் போனிகபூருக்கு ரூ.12.5 கோடி லாபம் கிடைத்ததாக திரையுலக வட்டாரங்கள் கூறுகின்றன.

Exit mobile version