Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் ஆபத்தை ஏற்படுத்தி வருகிறது. அனைத்து நாடுகளும் தடுப்பூசி கண்டுபிடிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.  சுகாதார அமைப்பின் அவசரகால சுகாதார திட்ட செயல் இயக்குனர் டாக்டர் மைக்கேல் ரயான் பேட்டி அளித்தபோது, இந்த வைரஸ் உலகத்திற்கே கேடு விளைவித்து வருகிறது தற்போது இந்தியாவில் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில் மிகவும் சக்திவாய்ந்த தடுப்பூசி இந்தியா உருவாக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது என இந்தியாவை புகழ்ந்துள்ளார்.

சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. இந்தியா 130 கோடி மக்கள் வசிக்கும் பெரிய நாடாகும் இதன் காரணமாகவே அங்கு அதிகமான மக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஒரு நாளைக்கு 5 லட்சக்கும் மேற்ப்பட்டடோர்க்கு பரிசோதனைகள் நடத்தபடுகிறது. மேலும் பரிசோதனை மையங்களையும் அதிகப்படுத்தியுள்ளது. கிராமப்புறங்களிலும் கொரோனா பரவி வருவது கவலை அளிக்கிறது. இளைஞர்களையும் தாக்கி வருகிறது. எனவே, நோய் பரவலை தடுப்பதுடன், நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று கூறினார்.

 

Exit mobile version