Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை!!

#image_title

ராமர் கோயிலுக்கு 10 லட்சம் நன்கொடை அளித்த பிரபாஸ்! ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற சிறப்பு பூஜை!
தெலுங்கானா மாநிலத்தில் உள்ள இராமர் கோயிலுக்கு நடிகர் பிரபாஸ் அவர்கள் 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கியுள்ளார். மேலும் ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜையும் போடப்பட்டுள்ளது.
இயக்குநர் ஓம் ராவத் அவர்கள் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ஆதிபுருஷ். இந்த திரைப்படம் இராமாயணக் கதையை மையமாக வைத்து 3டி தொழில் நுட்பத்தில் எடுக்கப்பட்டு வருகின்றது.
ஆதிபுருஷ் திரைப்படத்தில் நடிகர் பிராபாஸ் அவர்களுடன் இணைந்து நடிகர் சயீப் அலிகான், நடிகை கிருத்தி சனோன் மற்றும் பலர் நடிக்கின்றர். இதில் ராமர் கதாப்பாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் அவர்களும், சீதை கதாப்பாத்திரத்தில் நடிகை கிருத்தி சனோன் அவர்களும், இராவணன் கதாப்பாத்திரத்தில் நடிகர் சயீப் அலிகான் அவர்களும் நடிக்கின்றனர்.
மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் திரைப்படத்தை டீ சீரிஸ் நிறுவனமும், ரெட்ரோ பைல்ஸ் நிறுனவமும் சேர்ந்து தயாரிக்கின்றது. இந்த திரைப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் ஜூன் மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ளது. சமீபத்தில் ஆதிபுருஷ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.
இதையடுத்து ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று நடிகர் பிரபாஸ் அவர்கள் கோவில்களில் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் தெலுங்கானாவில் பத்ராச்சலம் ராமர் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்த நடிகர் பிரபாஸ் அவர்கள் ஆதிபுருஷ் திரைப்படம் வெற்றி பெற வேண்டும் என்று சிறப்பு பூஜையும் செய்தார்.
இதையடுத்து கோவில் நிர்வாக அலுவலர் ரமாதேவி அவர்களை சந்தித்து பேசிய நடிகர் பிரபாஸ் அவர்கள் அன்னதானத்திற்கும், கோசாலை விரிவாக்கத்திற்கும் 10 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கியுள்ளார். நடிகர் பிரபாஸ் அவர்களின் இந்த செயல் ரசிகர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
Exit mobile version