Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கிராம சபை கூட்டம்..! வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!!

கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது.

மகாத்மா காந்தி பிறந்தநாளை முன்னிட்டு தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள கிராம சபை கூட்டங்களுக்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை, உள்ளாட்சித்துறை வெளியிட்டுள்ளது.

வழிகாட்டு நெறிமுறைகள்:

காலை 11 மணியளவில், கிராம சபை கூட்டங்களை நடத்த வேண்டும்.

கிராம சபை கூட்டம், பாதுகாப்பான பொது வெளியிலோ அல்லது நல்ல காற்றோட்டமான கட்டிடத்திற்குள்ளோ நடத்த வேண்டும்.

கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிவதுடன், 6 அடி இடைவெளி விட்டு அமர வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்பவர்கள் அனைவருக்கும் உடல் வெப்ப பரிசோதனை கட்டாயமாக செய்ய வேண்டும்.

மேலே கூறப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடைபெற வேண்டும் என்று உள்ளாட்சித் துறை அறிவுறுத்தியுள்ளது.

Exit mobile version