Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கர்ப்பிணிகள் பீட்ரூட்டை சாப்பிடுவதால் இப்படியெல்லாம் நடக்குமா?! இவ்வளவு நாட்கள் தெரியாமல் போச்சே.!

பீட்ரூட் வேர்களில் வளரக்கூடிய ஒரு கனி. இவை மிகவும் மென்மையான தன்மையை கொண்டிருக்கும். இந்த பீட்ரூட்டை தினசரி தொடர்ந்து சாப்பிட்டு வருவதனால் பல நன்மைகள் ஏற்படுவதாக பல ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

போலிக் அமிலமானது பீட்ரூட்டில் மிகவும் அதிகமாக உள்ளது. இவை கர்ப்பிணி தாய்மார்களுக்கு முக்கிய சத்தாகும். ஏனெனில் பீட்ரூட்டில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது. இதனால் உடலில் இரத்த சோகை ஏற்படுவதை தடுத்து நிறுத்தும்.

பீட்ரூட்டை தொடர்ந்து சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் குறைகிறது. இதனால் உடலுக்குத் தேவையான சக்தியை அளிக்கிறது. மேலும், இதய நோய் சம்பந்தபட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கிறது.

மென்ஷியா எனும் மூளை சம்பந்த பட்ட பிரச்சனைக்கு தீர்வு காண்கிறது. பொட்டாசியம் அதிகம் நிறைந்துள்ள பீட்ரூட் நரம்பு மற்றும் தசைகளின் செயலாக்கத்திற்கு அதிகம் உதவுகிறது.

பொதுவாக பொட்டாஷியம் அளவு உடலில் குறைவதால் தான் சோர்வு, பலவீனம், மற்றும் தசைப்பிடிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். குறைவான பொட்டாசியம் சீரற்ற இதயத் துடிப்புக்கு காரணமாக இருக்கும்.

இந்த பீட்ரூட்டில் பொட்டாசியம் என்பது அதிக அளவு உள்ளது. அதனால் இதனை வாரம் இரு முறையாவது எடுத்துக்கொள்வது நல்லது. வெள்ளரிச்சாறை பீட்ரூட் சாற்றுடன் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகங்களும், பித்தப்பையும் பாதுகாக்கப்படும்.
பீட்ரூட் சாறுடன் படிகாரத்தைப் பொடியாக்கி சேர்த்துக் கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ, எரிச்சல், அரிப்பு மாறும்.

வினிகரை எடுத்து கொண்டு, பீட்ரூட்டை வேகவைத்து அதனுடன் கலந்து பொடுகு, சொறி, ஆறாத புண்கள் மேல் தொடர்ந்து தடவி வந்தால் அவை அனைத்தும் இருந்த இடம் தெரியாமல் போகும். மேலும் பீட்ரூட் சாறு அஜீரண தன்மையை நீக்கி செரிமான சக்தியைக் அதிகப்படுத்தும்.

Exit mobile version