சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்!

0
151
Pregnant policeman shot dead! The Taliban denied!

சுட்டுக் கொல்லப்பட்ட கர்ப்பிணி போலீஸ்! மறுப்பு தெரிவித்த தலீபான்கள்!

ஆப்கானிஸ்தானை முழுவதும் கைப்பற்றிய தலீபான்கள். அங்கு தற்போது தலிபான்கள் ஆட்சி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 20 ஆண்டுகளுக்குப் பிறகு தலிபான்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியதன் காரணமாக தங்களது ஆட்சி, முன்பு இருந்தது போல் கடுமையாக இருக்காது என்றும், பெண்களுக்கு சுய மரியாதை உரிமைகளை வழங்குவோம். என்றும் அவர்கள் வெளியே செல்லவும், கல்வி கற்கவும் அனுமதிப்போம் என்றும் தலிபான்கள் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார்கள்.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணி பெண் போலீஸ் அதிகாரி ஒருவரை அவரது குடும்பம் முன்னிலையிலேயே சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் இந்த செய்தியை டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். கோர் மாகாணத்தின் தலைநகர் பிரோஸ்கோவை சேர்ந்த போலீஸ் அதிகாரியான பானு நிகரா ஏற்கனவே இரண்டு குழந்தைகளுக்கு தாயான நிலையில், இவர் மீண்டும் தற்போது ஆறு மாத கர்ப்பமாக இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது வீட்டுக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த தலிபான் அமைப்பினர், அவரது கணவர் மற்றும் குழந்தைகள் முன்னிலையிலேயே அவரை சுட்டுக் கொன்றார்கள் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் தலிபான்களோ அப்படி எந்த ஒரு சம்பவமும் நடைபெறவில்லை. அதற்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என அறிவித்துள்ளனர்.

இதற்கிடையே ஹிஜாப் மற்றும் புர்கா அணியாவிட்டால் தலீபான்கள் தாக்கக் கூடும் என்ற அச்சத்தில் பெண்கள் தற்போது கடைகளில் முகத்தை மூடும் துணியை வாங்கி விட்டதாக ஸ்புட்னிக் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் தெரிவித்துள்ளார். 1990களில் தலிபான்களின் ஆட்சி நடந்தது போலவே தற்போதும் நடைபெறலாம் என ஆப்கானிஸ்தானின் பல பெண்களும் அச்சம் தெரிவித்து உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.