Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட கர்ப்பிணி பெண்! ராணிப்பேட்டை அருகே சோகம்!

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே இருக்கின்ற அரும்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகனா என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவருக்கும் 4 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது.

மூர்த்தி ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார், 7 மாத கர்ப்பிணியாக இருந்திருக்கிறார் மோகனா தற்சமயம் மூர்த்தி விடுமுறையில் சொந்த ஊருக்கு வருகை தந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில், கணவன் ,மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது.

இதன் காரணமாக, மன உளைச்சலில் இருந்த மோகனா வீட்டில் இருந்த எலி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்திருக்கிறார். இதனை கவனித்த உறவினர்கள் மோகனாவை மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறார்கள்.

அங்கே அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மோகனா மற்றும் வயிற்றில் இருந்த குழந்தை உள்ளிட்டோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார்கள். இதனை அடுத்து மருத்துவமனையின் நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் கொடுத்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அதோடு திருமணமாகி 4 வருடங்கள் ஆனதன் காரணமாக, கோட்டாட்சியர் விசாரணைக்கு உட்படுத்த காவல்துறையினர் கோட்டாட்சியருக்கு பரிந்துரை செய்திருக்கிறார்கள்.

Exit mobile version