Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!! 

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்!! வேகமாகச் சென்று கால்வாய்க்குள் பாய்ந்த கார்!! 

பிரசவ வலியால் துடித்த கர்ப்பிணி பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற கார் கால்வாய்க்குள் பாய்ந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள எட்டா  என்ற பகுதியை சேர்ந்தவர் நீரஜ் வயது 35. இவரது மனைவி வினிதா(25). நிறைமாக கர்ப்பிணியாக இருந்த வினிதாவுக்கு  திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக  ஒரு காரில் ஏற்றி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இவர்கள் கூடவே 2 உறவினர்களும்  துணைக்காக உடன் சென்றனர். காரை டிரைவர் சிவம் குமார் என்பவர் ஓட்டினார். 

பிரசவ வலி என்பதால் கார் மிகவும் வேகமாக சாலையில் சென்றுள்ளது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் நிலைத்தடுமாறி சாலையோரம் உள்ள கால்வாய்க்குள் பாய்ந்தது.

இந்த விபத்தில் காரினுள் இருந்த கர்ப்பிணிப் பெண் வினிதா உட்பட ஐந்து பேரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று காரினை கால்வாயில் இருந்து மீட்டு இறந்து போன ஐந்து பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிரசவத்திற்காக சென்ற கார் கால்வாயில் மூழ்கி கர்ப்பிணிப் பெண்ணுடன் ஐந்து பேர் இறந்த சம்பவம் கட்டா பகுதியில் அதிர்ச்சியையும் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

Exit mobile version