கர்ப்பிணி பெண்களே உங்களுக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டுமா? இந்த உணவுகளை சாப்பிடுங்க!
கர்ப்பமாக இருக்கும் அனைத்து பெண்களுக்கும் இருக்கும் ஆசை என்னவென்றால் அவர்களுக்கு சுகப் பிரசவம் ஆக வேண்டும் என்பது தான். அந்த வகையில் சுகப் பிரசவம் ஆவதற்கு தேவையான அனைத்து முயற்சிகளையும் கர்ப்பிணி பெண்கள் செய்து வருகின்றனர்.
அந்த வகையில் சுக பிரசவம் ஆவதற்கு சில உணவு வகைகளும் உதவி செய்கின்றது. அது என்னென்ன உணவு வகைகள் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சுகப் பிரசவம் ஆவதற்கு கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டிய உணவுகள்…
* கர்ப்பிணி பெண்கள் சுகப் பிரசவம் ஆவதற்கு ஆரஞ்சு பழத்தை சாப்பிட வேண்டும். ஆரஞ்சு பழத்தில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருக்கின்றது.
* கர்ப்பிணி பெண்கள் சுகப் பிரசவம் ஆவதற்கு பால் அதிகளவு குடிக்க வேண்டும். பாலில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றது. பால் சார்ந்த உணவுப் பொருட்களையும் சாப்பிடலாம்.
* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுகப் பிரசவம் ஆவதற்கு சர்க்கரை வள்ளி கிழங்கு சாப்பிட வேண்டும். சர்க்கரை வள்ளி கிழங்கில் நார்ச்சத்து, விட்டமின் ஏ ஆகிய சத்துக்கள் அதிகளவில் கிடைக்கின்றது.
* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் அனைவரும் ப்ரோக்கோலியை சாப்பிடலாம். ப்ரோக்கோலியை சாப்பிட்டால் பெண்களுக்கு சுகப் பிரசவம் ஆகும்.
* கர்ப்பிணி பெண்கள் வாழைப் பழத்தை சாப்பிடலாம். வாழைப் பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கின்றது.
* கர்ப்பிணி பெண்களுக்கு அதிகளவில் புரதச் சத்து தேவைப்படும். எனவே கர்ப்பிணி பெண்கள் முட்டையை அதிகளவு எடுத்துக் கொள்ளலாம். முட்டையில் புரதச் சத்துக்கள் அதிகளவில் இருக்கின்றது.
* கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சுகப் பிரசவம் ஆவதற்கு கீரை வகைகளை சாப்பிடலாம். கீரை வகைகளில் அதிகளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றது.