கர்ப்பிணி பெண்களே பனிக்குடம் உடைந்தால்.. முதலில் நீங்க செய்ய வேண்டியவது இது தான்!!

0
44
Pregnant women, if the ice cube breaks.. this is the first thing you should do!!

பெண்களின் பிரசவ காலத்தின் இறுதி மாதத்தில் பனிக்குடம் உடைந்தால் அது பிரசவ வலி வரப்போகிறது என்று அர்த்தம்.இது ஒவ்வொரு பெண்ணிற்கும் மாறுபட்டு இருக்கும்.சில பெண்களுக்கு பிரசவ காலத்திற்கு முன்கூடியயே பனிக்குடம் உடைந்துவிடும்.சிலப் பெண்களுக்கு பனிக்குடம் உடைவதில் தாமதம் ஏற்படும்.

உரிய நேரத்தில் பனிக்குடத்தில் நீர் வெளியேறுவது பிரசவ வலியை உணர்த்தும் ஓர் அறிகுறியாகும்.சிலருக்கு இப்படி பிரசவம் தொடங்கலாம்.

கர்ப்பிணி பெண்களின் கருப்பையில் அம்னோடிக் என்ற சாக் உள்ளது.இது கருவை பாதுகாப்பாக வளர வைக்க உதவுகிறது.குழந்தை வயிற்றில் இருந்து வெளியேறும் காலம் வரும் பொழுது யோனி வழியாக நீர் வெளியேறும்.பிரசவ வலிக்கு முன்னரே பனிக்குடம் உடைந்தால் அது சவ்வு முறிவு என்று அழைக்கப்படும்.

பனிக்குட நீர் வெளியேறப் போகிறது என்பதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.சிறுநீர் எப்படி வேகமாக வெளியேறுகிறது.அது போன்று தான் பனிக்குட நீரும் வேகமாக வெளியேறிவிடும்.நோய்தொற்று,புகைபிடிக்கும் பழக்கம்,எடை குறைவு,சிறுநீர்ப்பாதை தொற்று போன்ற பாதிப்புகளால் பனிக்குடம் முன்கூட்டியே உடையக்கூடும்.

முதலில் சொட்டு சொட்டாக பனிக்குட நீர் வெளியேறும்.பின்னர் சத்தத்துடன் பனிக்குட நீர் வெளியேறாலம்.அல்லது சத்தமின்றியும் பனிக்குட நீர் வெளியேறும்.யோனியில் நீர்க்கசிவு இருந்தால் அது பனிக்குட நீர் கசிவாக மட்டுமே இருக்கும்.கர்ப்பிணிகளே உங்கள் யோனியில் இருந்து பனிக்குட நீர் வெளியேறுவதை அறிந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.