இனி கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைக்கு செல்ல கூடாது? அமைச்சர் வெளியிட்ட தகவல்!
சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள சமுதாய நலக் கூட்டத்தில் அமைச்சர் கலந்து கொண்டார். அப்போது அமைச்சர் மா. சுப்பிரமணியம் கர்ப்பிணி பெண்களிடம் வேண்டுகோள் ஒன்று வைத்துள்ளார்.அந்த வேண்டுகோளில் அவர் கேட்டுகொண்டது அரசு மருத்துவமனைகளுக்கு வருவதற்கு கர்ப்பிணி பெண்களுக்கு அச்சம் உள்ளது. அதனால் அவர்கள் தனியார் மருத்துவமனையை நாடி செல்கின்றனர்.
ஆனால் தனியார் மருத்துவமனைகளில் தான் அதிக அளவு சிசேரியன் நடக்கிறது. அரசு மருத்துவமனைகளில் அவ்வாறு நடப்பதில்லை. பெரும்பாலும் அரசு மருத்தவமனைகளில் கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக வந்தால் அவர்களுக்கு சுகபிரசவம் ஆக வேண்டும் என மருத்துவர்கள் முயற்சி செய்கின்றனர்.
அவ்வாறு முடியாத பட்சத்தில் தான் சிசேரியன் செய்கின்றனர் எனவும் கூறியிருந்தார். அதனால் கர்ப்பிணி பெண்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் வந்து சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் வைத்துள்ளார். மேலும் அரசு மருத்துவமனைகளில் நடக்கும் சிசேரியன் பிரசவங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.