Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சி தேர்தலில் இன்று முதற்கட்ட வாக்குப் பதிவு தொடக்கம்.!! வாக்களர்கள் ஆர்வம்.!!

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய மாலை வரை நடைபெற உள்ளது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்டோபர் 6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

மேலும், 28 மாவட்டங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ஒன்பது மாவட்டங்களில் 23,998 பதவிகளை கைப்பற்ற, 79,433 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இதில் இன்று நடைபெறும் முதல் கட்ட வாக்குப்பதிவு வாக்குச்சாவடிகளில் காலையிலேயே வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களிக்க வரிசையில் திரண்டுள்ளனர். மேலும், வாக்கு நடைபெறும் பகுதிகளில் இருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும், தேர்தல் நடைபெறும் மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகள் மற்றும் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version