Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

உள்ளாட்சித் தேர்தல்! திமுக கூட்டணியில் இணையும் தேமுதிக?

தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கும்பகோணம் அருகே இருக்கின்ற திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அந்த கோவிலின் பரிகாரத்தை முடித்துக் கொண்டு அவர் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது திராவிடர் முன்னேற்ற கழகத்தின் 100 தினங்கள் ஆட்சியை நடுநிலைமையுடன் நன்றாகவும் நடத்தியிருக்கிறார்கள். இது இப்படியே தொடர வேண்டும் என தெரிவித்து இருக்கிறார்.

இதனை தொடர்ந்து அவரிடம் முன்னாள் அதிமுக அமைச்சர் இல்லங்களில் நடந்து வரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் தமிழ்நாட்டில் ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதை இந்த நிகழ்வு சுட்டிக்காட்டுகிறது. அதேபோல அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் சட்டம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பொதுமக்களும், அர்ச்சகர்களும் இதை ஏற்றுக் கொண்டாலும் இதை நாங்களும் ஏற்றுக் கொள்வோம் என தெரிவித்தார்.

அதோடு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர் உள்ளாட்சித் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக எப்போது அறிவிப்பு வெளியிடப்படும் அதனை சந்திக்க தொண்டர்கள் தயாராக இருக்க வேண்டும் என தெரிவித்து இருக்கிறார். அதோடு விஜயகாந்த் நலமுடன் இருக்கிறார் என்றும் அவர் தெரிவித்திருக்கின்றார்.கடந்த காலங்களில் திமுகவிற்கு ஒரு மிகப்பெரிய எதிர்ப்பாக முன்நின்று களம் கண்டது தேமுதிக. கடந்த 2011ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் திமுகவிற்கு எதிராக அதிமுகவுடன் கைகோர்த்து திமுகவிற்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது தேமுதிக.

ஆகவே அந்த சட்டசபை தேர்தலில் திமுக ஒரு மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது அதாவது எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை கூட அந்த தேர்தலில் திமுக பெறவில்லை. அந்த அளவிற்கு தேமுதிக திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்து நின்றது.

அதன் பிறகு அடுத்தடுத்த தேர்தல்களில் தேமுதிகவின் பலத்தை தெரிந்து கொண்ட திமுக தலைமை அந்த கட்சியை கூட்டணியில் இணைப்பதற்காக படாத பாடுபட்டது ஆனாலும் தேமுதிகவின் தலைவர் விஜயகாந்த் அதற்கு எந்த விதத்திலும் இடம் கொடுக்கவில்லை. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி எப்படியாவது கூட்டணியில் தேமுதிக இணைத்து விடலாம் என்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். ஆனாலும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை.

ஆனால் தற்சமயம் தேமுதிக முழுக்க முழுக்க பிரேமலதா கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கும் இந்த சூழ்நிலையில் திமுகவின் ஆட்சி நன்றாக இருக்கிறது என்று பாராட்டு தெரிவித்திருப்பது பொதுமக்களிடையே சந்தேகத்தை கிளப்பி இருக்கிறது. அதாவது எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க இருக்கிறது.

என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது. அதோடு பலரும் நிச்சயமாக தேமுதிக திமுக கூட்டணிக்கு செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவிக்கிறார்கள். அத்தோடு அதிமுக கூட்டணியில் ஏற்கனவே தேமுதிக கேட்ட சீட்டுகளை ஒதுக்கவில்லை என்று அதிமுக கூட்டணியின் மீது தேமுதிக கடும் கோபத்தில் இருக்கிறது. இதனால் எதிர் வரும் உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக திமுக பக்கம் சாயுமா? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

Exit mobile version