அண்ணியாருக்கு என்ன தான் ஆச்சு? பிரேமலதாவால் தலையில் அடித்துக் கொள்ளும் தேமுதிக நிர்வாகிகள்!

0
127
vijayakanth

அதிமுகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்ளவதாக அறிவித்த தேமுதிக உடனடியாக டிடிவி தினகரன் தலைமையிலான அமமுக கூட்டணியுடன் பேச்சுவார்த்தையில் இறங்கியது. பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு அமமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு 60 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் தேர்தலில் போட்டியிடாத நிலையில், விருத்தாசலம் தொகுதியில் பிரேமலதா விஜயாந்த் மட்டுமே போட்டியிடுவதாக வேட்பாளர்கள் பட்டியலில் அறிவிக்கப்பட்டது.

கணவர் விஜயகாந்த் முதன் முறையாக வெற்றி வாகை சூடிய இடம் என்பதால் தானும் சென்டிமெண்டாக முதன் முறையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். விஜயகாந்திற்கு கடலூர் மாவட்டத்தில் அதிக அளவிலான ரசிகர்கள் பட்டாளம் உண்டு என்பதாலும் அங்கு களமிறங்குவது தனக்கு வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும் என பிரேமலதா விஜயகாந்த் திட்டவட்டமாக நம்புகிறார். இந்நிலையில் பிரேமலதாவின் தம்பியும், தேமுதிகவின் தளபதியுமான எல்.கே. சுதீஷுக்கு சமீபத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது .

இதையடுத்து தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட அவர், தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அடுத்ததாக சேலம் மேற்கு தொகுதி வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் கடலூரில் தன்னுடைய பிரசாரத்தை தொடங்கிய பிரேமலதா விஜயகாந்தை அணுகிய சுகாதாரத்துறை அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் படி கேட்டுக்கொண்டுள்ளனர். ஆனால் தன்னுடைய பிரசாரத்தை திசை திரும்ப முயற்சிப்பதாக குற்றச்சாட்டிய பிரேமலதா, மாலை வந்து பரிசோதனை செய்து கொள்வதாகவும் கூறி மறுத்துவிட்டாராம். கொரோனா தொற்றை பரிசோதிக்க வந்த அதிகாரிகளையே மதிக்காமல் பிரேமலதா விஜயகாந்த் கண்டிப்பு காட்டியதால் பிரசாரத்திற்கு ஏதாவது சிக்கல் வந்துவிடுமோ? என்ற அச்சத்தில் இருக்கிறார்களாம் தேமுதிக நிர்வாகிகள்.

மற்றொருபுறம் எல்.கே.சுதீஷ் தற்போது பிரசாரத்தில் களமிறங்க முடியாத நிலையில் இருக்கிறார். விஜயகாந்த் பரப்புரைக்கு வருவாரா என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக உள்ளது. இந்த சமயத்தில் கட்சிக்கு ஒரே சப்போர்ட்டான அண்ணியாருக்கும் கொரோனா தொற்று வந்தால் என்னாவது?. அவர் தானே தொற்றிலிருந்து பாதுகாத்துக்கனும் சொன்னால் கூட புரிந்து கொள்ளமாட்டேங்கிறாரே என தேமுதிகவினர் புலம்பி வருகிறார்களாம்.