Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம்! பிரேமலதா விஜயகாந்த் சூளுரை..!!

2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமைப்போம்! பிரேமலதா விஜயகாந்த் சூளுரை..!!

ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற தேமுதிக வேட்பாளர்களுக்கு விஜயகாந்த் தலைமையில் சென்னையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இதில் பேசிய விஜயகாந்த், வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு மட்டுமல்லாமல், நான் உடல் நலம் தேறி மீண்டும் வருவேன் என்று தொண்டர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை தெரிவித்தார்.

இதையடுத்து, பேசிய பிரேமலதா விஜயகாந்த் அதிமுக கூட்டணி கட்சிகள் அனைவரும் கூட்டணி தர்மத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும், தற்போது தேமுதிக மட்டுமே கூட்டணி தர்மத்தை கடைபிடிப்பதாகவும் அழுத்தமாக கூறினார். கேப்டன் எப்போதும் சொன்ன சொல்லை மாறாதவர் என்றும் துளசி வாசம் மாறினாலும் இந்த தவசி வாக்கு மாறமாட்டார் என்று படத்தின் வசனத்தை மேடையில் பேசி காண்பித்தார்.

மக்களிடம் எங்களுக்கு இன்னும் செல்வாக்கு உள்ளது. கூட்டணி என்பதால் குட்ட குட்ட குனியமாட்டோம், குட்டு வாங்கும் சாதி நாங்கள் இல்லை என்று காட்டமாக பேசினார். வருகிற 2021 சட்டமன்ற தேர்தலில் அமோக வெற்றி பெற்று விஜயகாந்த் தலைமையில் தேமுதிக ஆட்சி அமைக்கும் என்றும் சூளுரைக்கும்படி பேசினார். இவரின் பேச்சு கூட்டணி கட்சிகளுக்கும் தேமுதிக விற்கும் இடையே பல சிக்கல் இருப்பது போல் அமைந்துள்ளது.

நாங்கள் கூட்டணி தர்மத்தை மதிப்பது போல் அனைவரும் மதிக்க வேண்டும், சட்டமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தேமுதிக அதிமுக கூட்டணி தொடருமா அல்லது தனியாக பிரியுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

Exit mobile version