Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

Prepare to overturn the train! Excitement in Salem district!

Prepare to overturn the train! Excitement in Salem district!

ரயிலை புரட்டிப் போடுவதற்கு ஏற்பாடு! சேலம் மாவட்டத்தில் பரபரப்பு!

சேலம் மாவட்டத்தில் ஜல்லிகள் சீரமைக்கும் இயந்திர ரயில் மேட்டூர் மார்க்கத்தில்லிருந்து சேலம் ஜங்ஷன் நோக்கி வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த ரயில் நிலையத்தை வந்தடையும் முன்பு சிக்னல்  கிடைக்கவில்லை. அதனால்  உடனடியாக ஓமலூர் ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில்  ரயில்வே ஸ்டேஷன் மாஸ்டர் விருத்திக்குமார் மற்றும்  கேங்மேன் ராமசாமி ஆகியோர் தண்டவாள பகுதியில் சென்று சோதனை செய்தனர்.

அப்போது ஒரு தண்டவாளத்தில் இருந்து மற்றொரு தண்டவாளத்திற்கு ரயிலை மாற்றுவதற்கான சிக்னல் அருகே இரு தண்டவாள இடைப்பட்ட பகுதியில் சுமார் 2அடி நீளமுள்ள தண்டவாள துண்டு  இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த  இரு தண்டவாள துண்டுகளையும் அகற்றி ரயில் இயந்திரம் செல்வதற்கு வழி செய்தனர்.

மேலும் இது தொடர்பாக ரயில்வே துறையினர் ஓமலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் பேரில் சேலம்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீ அபிநவ் சம்பவ இடத்தில் பார்வையிட்டார். மேலும் அது குறித்து விசாரணை நடத்தினார்கள் மேலும் அதநை தொடர்ந்து அப்பகுதியில் சுற்றி திரிந்த நபரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வாறு ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு துண்டுகளை வைத்திருப்பது ரயிலை கவிழ்த்து விடுவதற்கு செய்த சதி என்று சந்தேகம் அடைந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version