Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாடாளுமன்ற வேளாண் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்த குடியரசுத் தலைவர்! எதிர்ப்பையும் மீறி சாதித்த  மத்திய அரசு!

எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மத்திய அரசு நிறைவேற்றிய வேளாண் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.

 விவசாயிகளின் உற்பத்தி வர்த்தகம் மசோதா, விவசாயிகள் விலை உறுதி  மற்றும் பண்ணை சேவைகள்மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகிய விவசாயிகள் மற்றும் விவசாயத் துறை சார்ந்த மூன்று மசோதாக்களை குரல் வாக்கெடுப்பின் மூலம் மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது.

ஆனால் இந்த மசோதாக்களுக்கு நாடு முழுவதும்  பலர்பெரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது மத்திய அமைச்சர் பதவியை பாஜக கூட்டணி  எம்பியானஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜினாமா செய்துள்ளார். மேலும் நாடு முழுவதும் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பிய இந்த மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த மசோதா சட்ட வடிவம் பெற்றுள்ளன. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து மத்திய அரசு அதனை அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.

இதனால் விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

Exit mobile version