Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரஷ்யா கையில் எடுத்த “உலகின் கொடிய ஆயுதம்”!! அதிர்ச்சியில் உறைந்த அமெரிக்கா!!

President of Russia decided to use Satan 2 missile in the war against Ukraine

President of Russia decided to use Satan 2 missile in the war against Ukraine

Russia : ரஷ்யா அதிபர்  உக்ரைன் மீதான போரில் சாத்தான் 2 ஏவுகணை பயன்படுத்த முடிவு செய்துள்ளார்.

ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான போர் கடந்த இரண்டு வருடங்களாக நடந்து வருகிறது. வல்லாதிக்க நாடுகளில் ஒன்றான ரஷ்யாவுக்கு எதிராக போரில் உக்ரைன் நாட்டுக்கு பேர் உதவியாக அமெரிக்கா செயல்பட்டு வருகிறது. இதனால் தான் உக்ரைன் தொடர்ந்து ரஷ்யாவுக்கு எதிராக  போர் தாக்குதலை செய்ய முடிகிறது.

இந்நிலையில் அமெரிக்க உக்ரைன் இராணுவத்தினரை  அதி பயங்கர ஏவுகணைகளை போரில் பயன்படுத்தி கொள்ள அனுமதி வழங்கியது. இதற்கு பதிலடியாக அணு ஆயுதங்களை போரில் பயன்படுத்த முடிவு செய்து இருந்தார் ரஷ்யா அதிபர் புதின். அந்த வகையில் சாத்தான் 2 ஏவுகணைகளை போருக்கு தயார் செய்ய உத்தரவு பிறப்பித்து இருக்கிறார் புதின்.

இந்த சாத்தான் 2 ஏவுகணை 16,000 மைல் வேகத்தில் செல்லக் கூடியது ஆகும். இந்த ஏவுகணை கண்டம் விட்டு கண்டம் பாயும் வல்லமை கொண்டது. இது மொத்தம் 208 டன் எடை கொண்டது ஆகும்.  இந்த ஏவுகணை  7 கிலோ முதல் 10 டன் வரையிலான அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு மிக துல்லியமாக இலக்கை தாக்கும் திறன் கொண்டது.இந்த ஏவுகணைக்கு  RS-28 சர்மட் பெயரை வைத்து உள்ளது ரஷ்யா.

இந்த அணு ஆயுதங்களை பயன்படுத்தி கொள்ளவே ரஷ்யா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதன் தொடக்கமாக அணு ஆயுத ஷெல்டர்களை தயார் செய்து வருகிறது. இது ரஷ்யா மற்றும் உக்ரைன் என இரு நாட்டு இடையேயான போராக இருந்தாலும் அமெரிக்க முக்கிய தலையீடு இருக்கிறது.

மேலும் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்து இருந்தால் அமெரிக்காவிற்கு நெருக்கடியாக உள்ளது.

Exit mobile version