Russia : ஆபாச படங்கள் குறித்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சுவாரஸ்ய தகவல்களை வெளியிட்டுள்ளார் தற்போது அந்த தகவல்கள் தீயாய் பரவி வருகிறது.
ரஷ்யா மட்டுமல்லாமல் தற்போது சீனா முதற்கொண்டு பல நாடுகள் மக்கள் தொகை சரிவு சந்தித்து வருகின்றன. இந்த மக்கள் தொகை சரிவு பிரச்சனையானது கடந்த சில காலங்களாக பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. குறித்து அவர் ஆபாச படங்களை விட மக்களை ஈர்க்கும் விஷயங்கள் தேவை என கூறியது இப்போது கவனம் ஈர்த்து வருகிறது.
இளைஞர்கள் மக்கள் மத்தியில் தற்போது ஆபாச படங்கள் பார்ப்பது அதிகரித்து வந்துள்ளது. காரணம் மக்கள் ஆபாச படங்களை எளிதாக அணுகு முறையில் இருக்கிறது இதுவே ஆபாச படங்களை அதிகம் பார்க்க பெரிய காரணமாக இருந்து வருகிறது. மக்கள் தொகை சரிவுக்கு காரணமாக ஆபாச படம் இருப்பதாக காரணம் கூறப்பட்டு வருகிறது. இதற்கு ஆபாச படங்களை தடை செய்ய வேண்டும் என குரல்களும் எழுந்து வருகிறது.
இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒரு சில முக்கிய கருத்துக்களை வெளியிட்டார் தற்போது அது சமூக வலைத்தளம் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் ரஷ்ய அதிபர் புதின் கூறியதாவது மக்கள் மத்தியில் ஆபாச படங்களுக்கு மாற்றாக அவர்கள் அதிகம் ஈர்க்கும் வகையில் வேறு சுவாரசியமான அல்லது உணர்ச்சிமிக்க கண்டெண்டுகளை கொண்டு வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் பேசிய அவர் ஆபாச படம் என்பது ரஷ்யாவிற்கு மட்டும் பிரச்சினை அல்ல உலகெங்கும் இருக்கும் அனைத்து நாடுகளுக்கும் ஒரு முக்கிய பிரச்சினை தான் என்று குறிப்பிட்டார். மேலும் உள்ள மக்கள் தொகை விகிதத்தை அதிகரிக்க மற்றும் கருவுறுதல் விகிதத்தை அதிகரிக்க ரஷ்ய அரசு பல்வேறு வகையான புதுப்புது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.