Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

President to visit Tamil Nadu tomorrow!! Information released by Tamil Nadu Government!!

ஜனாதிபதி நாளை தமிழகம் வருகை!! தமிழக அரசு வெளியிட்ட தகவல்!!

திரெளபதி முர்மு இவர் தற்போது இந்திய ஜனாதிபதிஆவார். இவர்  தற்போது முதல் முறையாக  தமிழகதிற்கு வருவதாக தகவல் வந்துள்ளது. இந்த நிலையில் நாளை சென்னைக்கு ஜனாதிபதி வருகை தரவுள்ளார். மேலும் இவர் இந்திய விமானப்படை விமானத்தில் சென்னை மீனம்பாக்கம் பழைய விமான நிலையத்திற்கு மாலை வரவுள்ளார்.

இவரை வரவேற்க மு.க.ஸ்டாலின், கவர்னர், மற்றும் அமைச்சர்கள் வரவேற்கிறார்கள். இவர் சென்னை பல்கலைகழகத்தில் நடைபெறும் 165 ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள உள்ளார். இந்த விழா கிண்டி அண்ணா பல்கலைகழக அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த விழாவை முடித்து விட்டு கவர்னர் மளிகைக்கு செல்ல உள்ளார். மேலும் அவர் வருகையையொட்டி சென்னை மாநகரம் முழுவதும் பலத்த போலீசார் பாதுகாப்பு போடப்பட உள்ளது. அதனையடுத்து சாலை பணி, அவருக்கு தேவையான பாதுகாப்பு, மின்சாரம் போன்ற ஏற்பாடுகளை குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது.

அதனை தொடர்ந்து தமிழக அரசு குடியரசுத் தலைவருக்கு தேவையான பாதுகாப்பிற்கு ராணுவ படையுடன் ஆலோசனை நடத்தி வருகிறது. மேலும் சென்னையில் 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள். இதனையடுத்து அவருக்கு 5 அடுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தமிழக அரசு  தெரிவித்துள்ளது.

Exit mobile version