Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கூகுள் நிறுவனம் மீது புகார் வழங்கிய இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம்!

இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் புகாரின்பேரில் கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்திய போட்டி ஆணையம் விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது இந்திய பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் மேரி பால் ஒரு அறிக்கையை வெளியிட்டார் அதில் சில விஷயங்களை அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

அதாவது இந்திய செய்தி ஊடகங்கள் தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணைய தளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைத்துவிடுகின்றன. கூகுள் உள்ளிட்ட தேடு பொருளை பயன்படுத்தி அந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள், மேற்கோள் காட்டவும் பயன்படுத்திக் கொள்கிறார்கள், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

செய்திகளை உருவாக்குவதற்கு ஊடகங்கள் ஏராளமான பணம் முதலீடு செய்கிறார்கள் ஆனாலும் இந்த செய்திக்கு உரிய பணத்தை கூகுள் நிறுவனம் வழங்குவதில்லை. இந்த செய்திகளை பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட ஊடகங்களுக்கு உள்ளிட்ட நிறுவனங்கள் போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஸ்பெயின், உள்ளிட்ட பல்வேறு நாடுகள் சட்டமியற்றி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அதோடு கூகுள் நிறுவனம் தான் விளம்பரங்கள் மூலமாக ஈட்டிய ஒட்டு மொத்த வருவாய் தொடர்பாகவும், அதில் செய்தி ஊடக நிறுவனங்களுக்கு எத்தனை சதவீத பணம் கொடுக்கப்படுகிறது என்பது தொடர்பாகவும், செய்தி ஊடக நிறுவனங்களுக்கு தெரிவிப்பதில்லை என்று கூறப்பட்டுள்ளது.ஆகவே கூகுள் நிறுவனத்திற்கு எதிராக இந்திய போட்டி ஆணையத்தில் இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம் புகார் மனுவை தாக்கல் செய்திருக்கிறார்கள்.

இந்த புகார் மனுவில் கூகுள் இந்தியா அதன் தாய் நிறுவனம், துணை நிறுவனங்கள் உள்ளிட்டவை செய்தி மற்றும் விளம்பர சேவை குறித்த தங்களுடைய மேலாதிக்க நிலையை தவறாக பயன்படுத்தி வருவதாகவும், இது போட்டி சட்டம் 2002ன் 4வது பிரிவை மீறிய செயல் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கத்தின் புகாரை ஆராய்ந்த இந்திய போட்டி ஆணையம் இது போட்டி சட்டம் 2002 மீறிய செயல் என்பதற்கு முகாந்திரம் இருப்பதை கண்டறிந்ததாக சொல்லப்படுகிறது. ஆகவே இந்திய போட்டி ஆணையம் இந்த புகார் தொடர்பாக விரிவான விசாரணை நடத்துமாறு தன்னுடைய தலைமை இயக்குநருக்கு உத்தரவிட்டிருக்கிறது.

அதோடு இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம் தாக்கல் செய்த புகாரையும், மின்னணு செய்தி வெளியீட்டாளர்கள் சங்கம் தாக்கல் செய்த புகாரையும், நன்றாக இணைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது.

இந்திய பத்திரிக்கை அதிபர்கள் சங்கம் தன்னுடைய உறுப்பினர்களுக்கும் மாற்ற செய்தி வெளியிட்டால் அவர்களுக்கும் செய்திக்கான போதுமான இழப்பீட்டை பெற்றுத்தர பாடுபட்டு வருகிறது. இதற்கு பணம் வழங்கும் முறையை விரைந்து அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது என்று மேரி பால் தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version