தங்கம் கடந்து வந்த பாதையை திரும்பி பார்க்க வேண்டும் என மக்கள் கவலையுடன் இருக்கிறார்கள். ஏனெனில் 1920-ம் ஆண்டு 8 கிராம் கொண்ட ஒரு பவுன் விலை ரூ.21 ஆனால் கடந்த 2024அக்டோபர் 19-ம் தேதி புது உச்சத்தை தொட்டு ஒரு சவரன் ரூ.58,240-க்கு விற்பனையாகி தங்க பிரியர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
ஆனால் தற்போது தங்கம் விலை சற்று குறைந்து உள்ளது. அதற்கான காரணம் அக்டோபர் 22 தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்ததது. இதன் விளைவாக தற்பொழுது தங்கம் ஒரு சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்தது. இதனால் தங்க விலை தொடர்ச்சியாக குறைந்து வருவதன் காரணமாக நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளார்கள்.
ஆனால் இந்த நிலை மாறிவிடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளார்கள். இன்னும் சில நாட்களுக்கு மட்டுமே தங்கத்தின் விலை குறையும் பிறகு எதிர்பார்க்காத அளவுக்கு மீண்டும் புதிய உச்சத்தை தொடும் என பயப்படுகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தங்க விலை சவரனுக்கு ரூ.2,200 வரை குறைந்து ஒரு சவரன் ரூ.51 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இது போன்று தங்க விலை குறைந்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
ஏழை எளிய மக்களும் தனது பிள்ளைகள், பேரன், பேத்தி, என அனைவருக்கும் தங்கம் வாங்கி அணிவித்து மகிழ்வார்கள் . இந்த நிலையில் ஏழை மக்கள் தங்கம் அதிகரிப்பது காரணமாக “திரும்பிப்பார்க்கிறேன் தங்கம் வந்த பாதையை” என வருத்தத்துடன் கூறுகிறார்கள்.