கொரோனாவில் அனைவர்களும் வாழ்வாதாரத்தை இழந்து பரிதவித்து வருகின்றனர். அதில் கோயில் அர்ச்சகர்களும் பூசாரிகளும் அடங்குவர். கொரோனா காலத்தில் அனைத்து கோவில்களும் மூடப்பட்டு இருக்கும் நிலையில் தங்களுக்கும் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு பிராமணர் சங்கத் தலைவர் ஹரிஹர முத்தையர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் அவர் கூறியதாவது, கொரோனா ஊரடங்கு காலத்தில் பக்தர்கள் யாரும் கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. தினமும் தீப ஆராதனைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன. தட்டில் பக்தர்கள் போடும் காணிக்கை நம்பியே பல அர்ச்சகர்களின் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றன. எந்த ஒரு வழிபாட்டு நிகழ்ச்சியும் திருமணங்களும் நடைபெறவில்லை. அதனால் வரும் சிறு வருமானங்கள் கூட இல்லாமல் போய்விட்டது. இதனால் வாழ்வாதாரம் இன்றி பல அர்ச்சகர்கள் பூசாரிகள் தவித்து வருகின்றனர்.
எனவே வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் அர்ச்சகர்களுக்கும் பூசாரிகளுக்கும் நிதி உதவி மற்றும் பொருட்கள் உதவி செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், ஹரிஹர முத்தையர்.