Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

#image_title

பாஜகவை எதிர்ப்பதே முதன்மை நோக்கம்: துரை வைகோ பேச்சு!

பாஜகவை எதிர்ப்பதற்காகவே திமுக கூட்டணியில் இணைந்தோம் என கோவையில் செய்தியாளர் சந்திப்பில் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ பேசியுள்ளார்.

கோவை மதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் நிதி அளிப்பு கூட்டத்தில் அக்கட்சியின் முதன்மை செயலாளர் துரை வைகோ பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “பாஜகவை எதிர்க்கவே கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பாக திமுகவுடன் கூட்டணியில் இணைந்தோம்.

நாங்கள் மட்டுமல்லாது பொதுவுடமைகள் இயக்கம், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி என அனைத்து இயக்கங்களும் ஒருமித்த கருத்துடன் உள்ளோம். அதாவது 2024 நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் பாஜக ஆட்சி அமைத்து விடக்கூடாது மோடி பிரதமராவதை தடுக்க வேண்டும் என்ற ஒருமித்த கருத்துடன் மதவாத சக்திகளுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்து விடக்கூடாது என உறுதியுடன் செயல்படுகிறோம்.

மேலும் அதிமுக பாஜகவை எதிர்ப்பதை வரவேற்கிறோம். ஆனால் அடுத்து வரும் காலகட்டங்களில் அதிமுக அதனை நிரூபிக்க வேண்டும். அதனை மக்களும் நாங்களும் நம்ப வேண்டும். திராவிட இயக்கங்களை வலுப்பெறச் செய்வதற்கும் மதவாத சக்திகளை வேரோடு, நேரடி மண்ணோடு தமிழ்நாட்டில் இருந்து அகற்ற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன் அமைக்கப்பட்ட கூட்டணி தான் திமுக-மதிமுக கூட்டணி. தொகுதி பங்கீட்டில் குறைவான தொகுதிகளை வழங்கினாலும் இந்த கூட்டணியில் மாற்றம் ஏற்படாது.” எனக் கூறினார்.

Exit mobile version