பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார் – யாருக்கு தெரியுமா?

0
119

மைசூர் பல்கலைக்கழகம் தனது நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவை கொண்டாடுகிறது. இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி காணொளி காட்சி மூலம் உரையாற்றவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பட்டம் பெறும் மாணவர்கள் மட்டுமே நேரில் வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

பிற மாணவர்களும், பெற்றோர்களும், பல்கலைக்கழகத்தை சேர்ந்த இதர உறுப்பினர்களும் இந்நிகழ்ச்சியை காணொலி காட்சி மூலம் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதுமட்டுமன்றி இந்நிகழ்ச்சி கர்நாடக ஆளுநர் தலைமையில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமைச்சர்கள், நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் இந்நிகழ்ச்சியை இணையம் வழியாக காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம். இந்நிகழ்ச்சி குறித்த தகவல்களையும், இந்நிகழ்ச்சியை காண்பதற்கும் இணையம் வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் அலுவலக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மைசூர் பல்கலைக்கழகத்துடைய நூற்றாண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் இன்போசிஸ் பவுண்டேஷன் உடைய தலைவர் சுதா மூர்த்திக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட உள்ளதாம்.