Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

காதலர் தினத்தன்று சென்னை வரவிருக்கிறார் பிரதமர் மோடி!!

வருகின்ற Feb-14ஆம் தேதி டெல்லி வழியாக அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்னை வருகிறார் பிரதமர் மோடி.அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளின் உத்தேச அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டுள்ளதவாறு:
ஞாயிற்றுக்கிழமை காலை 7:50 மணி அளவில் டெல்லியில் இருந்து விமானப்படை விமானத்தில் புறப்பட இருக்கிறார்.10:35 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடையும் மோடி, சென்னை விமான நிலையத்தில் 10.40 மணி அளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு பிரத்தியேக ஹெலிபேடுக்கு சுமார் 11:00 மணி அளவில் சென்றடைவார்.

பின்பு 11.15 மணி அளவில் நேரு உள் விளையாட்டு மைதான அரங்கிற்கு சாலை வழியாக செல்லவிருக்கிறார்.பிறகு சுமார் 12.30 மணி வரை பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, 12.55.மணிக்கு மீண்டும் பிரத்தியேகக் ஹெலிபேடுக்கு செல்லவிருக்கிறார்.

பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 1.30 மணியளவில் சென்னை விமான நிலையம் அடைந்து,பிறகு கொச்சி விமான நிலையத்திற்கு 2.45மணி அளவில் சென்றடைவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

Exit mobile version