பொங்கல் விழாவில் பங்கேற்கும் பிரதமர் நரேந்திர மோடி! மதுரையில் ஏற்பாடுகள் தீவிரம்!

0
120

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு மருத்துவக் கல்லூரியின் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவித்திருந்தார். அதன் ஒரு பகுதியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதில் தமிழகத்தில் ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், நாமக்கல், திருவள்ளூர், நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, அரியலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் 11 மருத்துவ கல்லூரிகள் ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தற்போது இதற்கான கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு இருக்கின்றன.

ஆகவே இந்த பதினோரு மருத்துவ கல்லூரிக்கான திறப்பு விழா விருதுநகரில் வருகிற 12-ஆம் தேதி நடைபெறுகிறது இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொண்டு மருத்துவக் கல்லூரிகளை திறந்து வைக்க இருக்கிறார், இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல தலைவர்கள் பங்கேற்று கொள்ள இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12-ஆம் தேதி மதியம் புதுச்சேரியில் இருந்து விமானம் மூலம் மதுரை வருகிறார், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக விருதுநகர் செல்ல இருக்கிறார்.

விருதுநகரில் நடைபெறும் மருத்துவ கல்லூரி விழாவில் பங்கேற்று விட்டு அதன் பிறகு அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக மதுரை வருகை தருகிறார். மதுரையில் அவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடைபெறும் பொங்கல் விழாவில் பங்கேற்று கொண்டு சிறப்பிக்க இருக்கிறார். மாலை 6 மணி முதல் 7 மணி வரையும் நடைபெற இருக்கிறது.

பொங்கல் விழாவில் பங்கேற்று கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி விமான நிலையத்தில் இருந்து கார் மூலமாக விழா நடைபெறும் மண்டேலா நகருக்கு வர இருக்கின்றார். அப்போது வழியெங்கிலும் அவருக்கு தமிழர் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு வழங்கப்படுகிறது, இதனை முன்னிட்டு பொங்கல் விழாவில் 10008 குடும்பங்கள் பங்கேற்று கொண்டு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது, அதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கொள்கிறார். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்வதற்காக மதுரை மாநகர் மாவட்ட தலைவர் சரவணன் உட்பட 18 பேர் அடங்கிய குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.