அசாம் மாநிலத்தில் ஒரு லட்சத்து 6 ஆயிரம் பேருக்கு நிலப்பட்டாக்களை வழங்கினார் பிரதமர் மோடி. அதாவது அம்மாநிலத்தில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை இன்று பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
சிவசாகரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி அனைத்து பயனாளிகளுக்கும் நிலப்பட்டாக்களை வழங்கி சிறப்புரை ஆற்றியுள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி மக்களிடம் கூறியதாவது :
“இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்து 70 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது, ஆனால் மக்கள் தங்களின் நிலப்பட்டாக்கள் இல்லாமல் வாழ்வதுள்ளது தனக்கு வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார். அசாம் மாநில அரசு மண்ணின் மைந்தர்கள் ஆகிய மக்களுக்கு தங்களின் நில உரிமையை அங்கீகரிக்கும் வகையில் நிலப்பட்டாக்களை வழங்கும் திட்டத்தை தன் மூலம் துவங்கி வைத்துள்ளதை பாராட்டினார்.
மேலும் அசாம் மாநிலத்தின் மொழியும் மற்றும் அம்மாநிலத்தின் பண்பாட்டையும் பாஜக அரசு என்றும் மதிக்கும் எனவும் அவற்றை பாதுகாக்கும் எனவும் கூறியுள்ளார் பிரதமர் மோடி. அத்துடன் அசாம் மாநிலத்தை சேர்ந்த 40 விழுக்காடு மக்கள் மத்திய அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் அடிப்படையில் பெரிதும் பயனடைவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.”