சீன அதிபர் ஜின்பிங்கை சந்திக்க பிரதமர் மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்திருக்கிறார். மோடியை ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
வரவேற்பு முடிந்து, ஹெலிகாப்டரில் மோடி கோவளம் சென்ற மோடி நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார். மாலை 4.55 மணிக்கு மாமல்லபுரம் வரும் ஜின்பிங்கை வரவேற்கிறார். இருவரும் மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற சிற்பங்களை பார்வையிடுகின்றனர்.
அர்ஜுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை, ஐந்து ரதம் ஆகியவைகளை பார்வையிடும் அவர்கள், தொடர்ந்து கடற்கரை கோயில் அருகில் நடைபெறும் பிரமாண்ட கலைநிகழ்ச்சிகளை பார்க்கின்றனர். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக பிரதமர் மோடி, சீன அதிபர் ஜிங்பிங் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் டுவிட் ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ், சீன மொழிகளில் அவர் அந்த டுவீட்டை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: சென்னை வந்திறங்கி உள்ளேன். கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ் நாட்டுக்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.
சீன அதிபர் ஜிங்பிங்கை தமிழ்நாடு உபசரிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தியா, சீனா இடையேயான உறவு, இந்த முறைசாரா உச்சி மாநாட்டின் மூலம் மேலும் வலுப்பெறட்டும் என்று கூறியிருக்கிறார்.
மேலும் இதுபோன்ற தமிழ் செய்திகள், மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள், தொழில்நுட்ப செய்திகள், பொழுதுபோக்கு செய்திகள், சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் பேன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும், முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.