லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலை பாடிய பிரதமர் மோடி!! இணையத்தில் வைரல்!!

0
93
#image_title

லியோ படத்தின் ‘நா ரெடி’ பாடலை பாடிய பிரதமர் மோடி!! இணையத்தில் வைரல்!!

தமிழ் திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் விஜய்.கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான ‘நாளைய தீர்ப்பு’ என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு கதாநாயகனாக அறிமுகமானார். இதுவரை தமிழில் 66 படங்களில் நடித்துள்ள விஜய் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டு மாஸ் ஹீரோவாக ஜொலித்து வருகிறார்.

இந்நிலையில் தற்பொழுது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67 படமான லியோ படத்தை நடித்து முடித்திருக்கிறார்.
இப்படத்தில் இவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார்.இவர்களை தவிர்த்து சஞ்சய் தத், அர்ஜுன்,கௌதம் மேனன்,மன்சூர் அலிகான்,மிஷ்கின் என நடிகர் பட்டாளமே இணைந்து நடித்துள்ளனர்.செவன் ஸ்கீரின் ஸ்டுடியோ தயாரித்துள்ள இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.

வருகின்ற அக்டோபர் 19 அன்று உலகம் முழுவதும் இப்படம் வெளியாக இருக்கின்றது. இப்படத்தின் ஆடியோ லான்ச் இந்த மாத இறுதியில் நடைபெற இருக்கிறது.இதற்கு முன்னதாக கடந்த ஜூன் மாதம் ‘நான் ரெடி தான் வரவா’ என்ற வரிகளோடு ஆரமிக்கும் இப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி ட்ரெண்டாகி வந்தது.

இந்நிலையில் தற்பொழுது ‘நா ரெடி தான் வரவா’ பாடலை பிரதமர் மோடி பாடினால் எப்படி இருக்கும் என்று சிந்தித்த விஜய் ரசிகர் ஒருவர் அதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்.அதன்படி AI மூலம் ‘நா ரெடி’ பாடலை பிரதமர் மோடியின் குரலை வைத்து மிக்ஸ் செய்து உருவாக்கியுள்ளார்.இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் தீயை பரவி வருகிறது.