Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிரதமர் மோடியால் பல கோடி செலவு!! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!! 

Prime Minister Modi spends crores!! Social activists accused!!

Prime Minister Modi spends crores!! Social activists accused!!

பிரதமர் மோடியால் பல கோடி செலவு!! சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!!

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்பது இந்திய ரயில்வே இயக்கப்படும் ஒரு குறுகிய தூர ரயில் சேவை. இந்த சேவை ஒரு நாள் நேரத்திற்கு குறைவான தூரத்தில் உள்ள முக்கிய இந்திய நகரங்களை இணைக்கும் பகல் நேர ஆயில் சேவையாகும். முதலில் இந்த ரயில் சேவை பிப்ரவரி மாதம் 15 ஆம் தேதி 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த சேவை நாட்டின் மிக முக்கிய நகரங்களை இணைக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது போன்ற ரயில் சேவைகள் 23 பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

அதனையடுத்து இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை சென்ட்ரல் ரயில் ரயில் நிலையத்திலிருந்து திருப்பதி வரை செல்லும் சேவை ஜூலை 7 ஆம் தேதி தொடங்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்தது. மேலும் அதே தேதிகளில் கோரக்பூர் முதல் லக்னோ வரை,  ஜோத்பூர் முதல் அகமதாபாத் வரை மொத்தம் மூன்று சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மேலும் ஏப்ரல் மாதம் கேரளாவில் திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு ரயில் நிலையத்திற்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்வை விளம்பர படுத்த 1.5 கோடி ரூபாய் செலவாகி இருப்பதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது. அதனை தொடர்ந்து பிரதமர் மோடி நேரில் சென்று ரயில் சேவைகளை தொடங்கி வைப்பதால் பல கோடி பணங்கள் செலவாவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

Exit mobile version