காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!!

0
120
#image_title
காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் பிரதமர் மோடி படித்தார்! பிரியங்கா காந்தி பேட்டி!!
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் என்று பிரச்சாரம் ஒன்றில் கூறியுள்ளார்.
மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் நவம்பர் மாதம் 17ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. மத்தியப் பிரதேசம் மாநிலத்தில்உள்ள 230 தொகுதிகளுக்கும் நவம்பர் 17ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு பின்னர் தேர்தல் முடிவுகள் வரும் டிசம்பர் மாதம் 3ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கி மும்முரமாக மக்களிடம் வாக்கு சேகரித்து வருகின்றனர்.
தற்பொழுது மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் பாஜக கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகின்றது. முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் அவர்கள் இருக்கின்றார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி பாஜக கட்சியை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் இந்தூரில் பிரச்சாரம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் பிரதமர் மோடி அவர்கள் காங்கிரஸ் கட்சி கட்டிய பள்ளியில் தான் படித்தார் என்று கூறினார்.
இது தொடர்பாக அந்த பிரச்சாரத்தில் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அவர்கள் “இந்தியா ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 70 ஆண்டுகளில் இந்தியா எந்தவொரு வளர்ச்சியும் கண்டது இல்லை என்று பாஜக கட்சியினர் கூறுகின்றனர். அவர்கள் காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்ய வேண்டும் என்று கூறுகின்றனர். ஆனால் 70 ஆண்டுகளில் வளர்ச்சி இல்லை என்றால் பள்ளிகள் எவ்வாறு இருந்திருக்கும். பிரதமர் மோடி அவர்கள் எவ்வாறு படித்திருப்பார்.
காங்கிரஸ் கட்சியின் ஆட்சியில் கட்டப்பட்ட பள்ளிகளில் தான் பிரதமர் மோடி அவர்கள் படித்துள்ளார். ஒன்று மட்டும் என்னால் செல்ல முடியும். பிரதமர் மோடி அவர்களின் பொலிட்டிக்கல் சயின்ஸ் பாடத்தின் சான்றிதழை பிரிண்ட் செய்த கம்பியூட்டர் காங்கிரஸ் அரசு கெடுத்தது” என்று கூறினார்.