ஊரடங்கு காலங்களில் விலங்குகளுக்கு உணவளித்த ராணுவப் பெண் அதிகாரிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதி பாராட்டு!!
ராஜஸ்தானில் கோட்டாவைச் சேர்ந்தவர் பிரமிளா சிங் இவர் ஓய்வுப் பெற்ற ராணுவ மேஜராக உள்ளார்.கொரோனா காலம் தொடங்கிய முதல் ஒன்றரை ஆண்டுகளாகவே ஆதரவற்றுத் தெருக்களில் சுற்றித் திரியும் விலங்குகளுக்கு உணவு மற்றும் மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார். இந்த பணிகளில் அவரது தந்தை ஷாம் என்பவரும் இவருக்கு உதவியாக இருந்து வருகிறார்.
இதனை அறிந்த பிரதமர் நரேந்திர மோடி இவர்களை மிகவும் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறப்பட்டவை என்னவென்றால் கொரோனா காலம் தொடங்கிய முதல் தெருவில் ஆதரவற்று சுற்றித்திரியும் விலங்குகளுக்கு உணவு கிடைக்காமல் தவிப்பதை அறிந்து அவைகளுக்கு உதவி செய்த இவர்களின் நடவடிக்கைகள் சமுதாயத்திற்கு மிகவும் உத்வேகம் அளிப்பதாக உள்ளது என்றுக் கடிதத்தில் கூறியிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி கொரோனா காலம் மனிதர்களுக்கு மட்டுமின்றி அவர்களுடன் நெருக்கமாக வாழும் விலங்குகளுக்கும் கடினமானதாகவே உள்ளது இந்த கொரோனா காலம் இது போன்ற நிலையில் ஆதரவற்ற விலங்குகளின் தேவைகளை உணர்ந்து அவர்களின் தனிப்பட்ட முறையில் பணியாற்றியது பாராட்டத்தக்கது என்று கூறியுள்ளார் மோடி. முன்னாள் ராணுவ மேஜர் பிரமிளாவும் அவரது தந்தையும் தங்களின் பணிகளை தொடருவோம் என்பதுடன் தங்கள் பணிகளால் மேலும் பலரையும் இது போன்ற சேவைகளில் ஈடுபட ஊக்குவிப்போம் என நம்புகிறோம் என்று பிரதமர் நரேந்திர மோடி பதில் எழுதி கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்கள்.