முஜ்ரா நடனம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி! கண்டனம் தெரிவித்த கார்கே! 

0
243
Prime Minister Narendra Modi talked about Mujra dance! Condemned Karke!
முஜ்ரா நடனம் பற்றி பேசிய பிரதமர் நரேந்திர மோடி! கண்டனம் தெரிவித்த கார்கே!
பீகார் மாநில பிரச்சாரம் ஒன்றில் கலந்து கொண்ட பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முஜ்ரா நடனம் குறித்து பேசினார். இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடைசி கட்ட தேர்தலுக்கான பிரச்சாரத்தில் நரேந்திர மோடி அவர்கள் நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றார். இதையடுத்து பீகார் மாநிலத்தின் பாடலிபுத்ரா மக்களவை தொகுதியில் பிரச்சாரம் செய்தார். அப்பொழுது பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முஜ்ரா நடனம் குறித்தும் இந்தியா கூட்டணி குறித்தும் பேசினார்.
பாடலிபுத்ரா மக்களவை தொகுதியின் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் “சமூக நீதிக்கு தேவையான போராட்டத்தில் புதிய வழிகாட்டுதல்களை வழங்கிய மாநிலம் பீகார் மாநிலம். இந்த மண்ணில் ஒன்றை நான் அறிவிக்க விரும்புகிறேன்.
அதாவது எஸ்.சி, எஸ்.டி, ஓபிசிக்களின் உரிமைகளை இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கும் இந்தியா கூட்டணியின் திட்டங்கள் அனைத்தையும் நான் முறியடிப்பேன் என்று இந்த மண்ணில் நான் கூறிக் கொள்கின்றேன். இந்தியா கூட்டணியை சேர்ந்தவர்கள் அடிமைகளாக இருப்பது போல வாக்கு வங்கியை திருப்தி படுத்த நினைக்கிறார்கள். வாக்கு வேண்டும் என்றால் முஜ்ரா நடனம் கூட ஆடுவார்கள்” என்று குறிப்பிட்டார்.
இவருடைய இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் முஜ்ரா நடனம் என்பது சாதாரணமான நடன வகையை சேர்ந்தது அல்ல. முஜ்ரா நடனம் என்பது ஒரு வகையான கவர்ச்சி நடனம் ஆகும். இந்த முஜ்ரா நடனம் முகலாய ஆட்சியின் பொழுது தோன்றிய நடன வகை ஆகும்.
அந்த காலத்தில் நவாப்புகள், பிரபுக்கள், இந்திய உள்ளூர் ஆட்சித் தலைவர்கள் அனைவரும் பொழுதுபோக்க வேண்டும் என்று பெண்களை பயன்படுத்தினர். அந்த பெண்கள் ஆடும் கவர்ச்சியான நடனம் தான் முஜ்ரா நடனம் ஆகும். இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இந்தியா கூட்டணியினர் முஜ்ரா நடனம் ஆடுகிறார்கள் என்று கூறியதற்கு காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று(27.05.2024) பீகார் மாநிலத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அவர்கள் “பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையிலான பாஜக அரசு எப்பொழுதும் பணக்காரர்களுக்காக நிற்கின்றது. ஆனால் காங்கிரஸ் கட்சி எப்பொழுதும் ஏழைகள் பக்கமே நிற்கும்.
நாங்கள் வந்து பாகிஸ்தான் நாட்டுடன் போர் புரிந்து வங்கதேசத்திற்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தோம். தற்பொழுது சீனா அரசாங்கம் இந்திய எல்லைப் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்து வீடுகளையும் சாலைகளையும் கட்டி வருகின்றது. இந்த விஷயத்தில் ஏன் பிரதமர் நரேந்திர மோடி அமைதியாக இருக்கிறார்.
நடைபெற்று வரும் இந்த நாடாளுமன்ற தேர்தல் ராகுலுக்கும் மோடிக்குமான தேர்தல் அல்ல. மக்களுக்கும் மோடிக்குமான தேர்தல்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் முஜ்ரா நடனம் குறித்து பேசியுள்ளார். அவருடைய இந்த பேச்சு பீகார் மக்களை அவமதித்துவிட்டது. ஏனென்றால் முஜ்ரா நடனம் பீகாரில் தான் அதிகமாக ஆடப்படுகின்றது. இதனால் முஜ்ரா குறித்து பேசி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பீகாரையும் பீகார் மாநில வாக்காளர்களையும் அவமதிப்பு செய்து விட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் எதேச்சதிகாரத்துடன் செயல்பட்டு வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் எண்ணம் தவறான எண்ணம். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகின்றார். பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வந்தால் அவர் மக்கள் எதையும் பேசுவதற்கு அனுமதிக்க மாட்டார்” என்று கூறினார்.