அதிகரித்து வரும் நோய்த்தொற்று! அனைத்து மாநில ஆளுநர் களுடனும் பிரதமர் இன்று முக்கிய ஆலோசனை!

0
116

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக கொரோனா அதிகமாகி வருகிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எடுத்த துரித நடவடிக்கையின் காரணமாக, தமிழகத்தில் வெகுவாக இந்தத் தொற்று குறையத் தொடங்கியது.ஆனால் தற்சமயம் தேர்தல் நடைமுறை வந்து விட்டபடியால் அவரால் சரிவர செயல்பட முடியவில்லை. அரசு நிர்வாகமும் அதிகாரிகளின் கைக்கு சென்று விட்டதால் அவரால் தீவிர நடவடிக்கை எதுவும் எடுக்க முடியவில்லை என்று சொல்லப்படுகிறது. அதன் காரணமாகவே இந்த தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அதோடு மக்களுடைய அலட்சியம் காரணமாக தான் இந்த தொற்று தற்சமயம் அதிகரித்து வருவதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இயக்குனர் தெரிவித்திருப்பது எல்லோரையும் யோசிக்க வைத்திருக்கிறது. மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எதையும் செய்யவில்லை. பொது இடங்களில் அதிக அளவில் கூட்டம் கூடுவது, முகக்கவசம் அணியாமல் வெளியில் செல்வது, தேவையில்லாமல் வெளியே செல்வது, போன்ற பல நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள் அதனுடைய வெளிப்பாடுதான் இந்த நோய்த்தொற்றின் பரவல் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்கள் உடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.நம்முடைய நாட்டில் தற்சமயம் இந்த தொற்று பரவலின் இரண்டாவது அலை உண்டாகியிருக்கிறது. உலகின் பல நாடுகளிலும் இந்த தொற்றின் பாதிப்பு மிக வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகள் பல துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்த நிலையில், இந்த தொற்றின் பாதிப்பு குறித்து பிரதமர் நரேந்திர மோடி இன்று இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து மாநில ஆளுநர்கள் உடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட இருக்கிறார். அதோடு இந்த கூட்டம் காணொளி வாயிலாக நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த கூட்டத்தில் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களும் பங்கேற்க இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு இந்தக் கூட்டத்தில் துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடுவும் பங்கேற்க இருக்கிறார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் இந்த தொற்றின் பரவல் தொடர்பாகவும், அதனை கட்டுப்படுத்த வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், விவாதிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.கடந்தவாரம் அனைத்து மாநில முதல்வர்களுடனும் பிரதமர் ஆலோசனை மேற்கொண்டார் என்பது குறிப்பிட தக்கது