Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தென் மாநிலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் 2 நாள் திடீர் விஜயம்! காரணம் என்ன?

பிரதமர் நரேந்திர மோடி தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 4 தென் மாநிலங்களில் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.

கர்நாடகாவில் அந்த மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு நாளை காலை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க்கிறார். முதலில் பெங்களூரில் இருக்கின்ற சட்டசபை வளாகத்தில் ஆன்மீக பக்தி கவிஞர் கனகதாசர், மகரிஷி வால்மகியின் சிலைகளுக்கு மலரஞ்சலி செலுத்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதன் பின்னர் பெங்களூரு ரயில் நிலையத்தில் சென்னை, மைசூர் இடையிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் பாரத கௌரவ காசி தர்ஷன் ரயில்களை கொடியசைத்து துவக்கி வைக்கிறார்.

அதன் பின்னர் கெம்பே கவுடா சர்வேச விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. பெங்களூரில் அமைக்கப்பட்டுள்ள பெங்களூரை ஏற்படுத்திய நாத பிரபு கம்பேகவுடாவின் 108 அடி உயர வெங்கல சிலையை திறந்து வைக்கிறார். அங்கிருந்து தமிழ்நாடு வரும் பிரதமர் நரேந்திர மோடி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கின்ற காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாலையில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கிறார். இதில் 2018, 2019,2020 ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற 2300 மாணவர்களுக்கு வட்டம் வழங்கப்பட உள்ளது.

மேலும் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் ஆந்திர மாநிலத்தின் விசாகப்பட்டினத்தில் நாளை மறுநாள் காலை நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு திட்டப் பணிகளை ஆரம்பித்து வைத்து புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

அதன் பிறகு மாலையில், சந்திரசேகர ராவ் தலைமையிலான ஆட்சி நடைபெறும் தெலுங்கானாவின் ராமகுண்டத்தில் பல்வேறு திட்டங்களை அவர் ஆரம்பித்து வைக்கிறார்

Exit mobile version